Published on 23/12/2021 | Edited on 23/12/2021

திருச்சி மாவட்டத்தில் நான்காவது நாளாக இன்றும் பொதுமக்களிடம் இருந்து மனுக்களை வாங்கும் குறைதீர் முகாம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவுரையின்படி, கடந்த 20ஆம் தேதி முதல் திருச்சி மாவட்டத்தில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறும் சிறப்பு குறைதீர் முகாம், அமைச்சர்கள் தலைமையில் நடைபெற்றுவருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று முசிறி வட்டம், முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், தொட்டியம் வாணப்பட்டறை மைதானத்திலும் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட இந்த மனுக்களை அமைச்சர் கே.என். நேரு பெற்று, திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவராசுவிடம் கொடுத்து துறை ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டார்.