Skip to main content

பிரம்மாண்டமாய் திருச்சியில் தேசம் காப்போம் பேரணி!

Published on 22/02/2020 | Edited on 22/02/2020

 

கடந்த முறை திருச்சியில் தேசம் காப்போம் பொதுக்கூட்டத்திலும் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது. இந்த முறை தேசம் காப்போம் பொதுக்கூட்டத்திற்கு திருச்சி மாநகர காவல்துறை அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் அனுமதிக்காக வழக்கு தொடுத்தனர்.

ஆரம்பத்தில் நீதிமன்றமும் அனுமதி மறுத்த நிலையில் 3000 பேர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று திருச்சி மாநகர செயலாளர் அருள் கொடுத்த தகவலின் அடிப்படையில் நீதிமன்றம் அனுமதி வழங்கியது. எம்ஜிஆர் நசிலையிலிருந்து உழவர் சந்தைக்கு பேரணியாக செல்வது என அனுமதி கொடுக்கப்பட்டது.

ஆனால் திருச்சி உளவுத்துறை போலீஸோ லட்சக்கணக்கில் திரளுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் வரதராஜூலு தகவல் கொடுத்ததால் அவர் நீதிமன்றம் மூலம் வாங்கின அனுமதி இடத்தை மறுத்து இரவோடு இரவாக திருச்சியின் புறநகர் பகுதியில் சில இடங்களில் காண்பித்தார்.

கடைசியில் திருச்சி மதுரை பழைய பைபாஸ் சாலையில் பேரணிக்கு மட்டும் அனுமதி கொடுத்தனர். கடைசி நேரத்தில் திருச்சி மாநகரம் போக்குவரத்து நெரிசலுக்குட்படாத வகையில் விடுதலைச்சிறுத்தைகளின் பேரணியில்‌ பாதை மாற்றம் செய்யப்பட்டது.

பேரணி திருச்சியிலிருந்து மதுரை செல்லும் பைபாஸ் சாலையில் பஞ்சப்பூர் என்னும் இடத்தில் வலதுபுறமாக பிரியும் பழைய மதுரை சாலையில் ஆர் சி நகர் கூட்டுச் சாலையில் இருந்து பேரணி புறப்பட்டது. ரயில்வே பாதையை கடக்கும் மேம்பாலத்தின் வழியாக பேரணி காவல்துறை குடியிருப்பு வரை சென்றது.

ஏறத்தாழ இரண்டு கிலோமீட்டர் தூரம் இந்த பேரணி நடைபெற்றது. ஆர் சி நகர் கூட்டு சாலை எடமலைப்பட்டி புதூர் பகுதியாகும். அங்கே கிறிஸ்தவ பள்ளியில் இருந்து தான் பேரணி துவங்கியது. 3.30 மணிக்கு புறப்பட்ட பேரணி 6.00 மணிக்கு முடியும் இடத்திற்கு வந்தது.

பேரணி முழுவதும் திருமாவளவன் திறந்த வேனில் மேலிருந்து குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியபடியே வந்தார்.

பேரணியில் நான்கு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பேரணியில் பேசிய திருமாவளவன்,
 

இட ஒதுக்கீடு உரிமையை பாதுகாக்க வேண்டும். இரண்டு மாதங்களாக முஸ்லிம்கள் மட்டுமே இந்த சட்டத்தை எதிர்த்துப் போராடுகிறார்கள் என்ற மாயையை விடுதலை சிறுத்தைகள் கட்சி தனிப்பட்ட முறையில் லட்சக்கணக்கில் இந்த சட்டத்திற்கு எதிராக கோஷம் போட்டு வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சட்டத்தை நாங்கள் ஏன் எதிர்க்கிறோம் என்றால் நாங்கள் தந்தை பெரியார் மற்றும் அம்பேத்கர் பிள்ளைகள். பதவி வெறி பிடித்தவர்களாய் இருந்திருந்தால் மோடியின் காலடியிலும் எடப்பாடியின் காலடியில் கிடந்து இருப்போம். பாஜக தேர்தல் கட்சி அல்ல அதை பின்னால் இயக்குவது ஆர்எஸ்எஸ் என்கிற இயக்கம். அந்த இயக்கம்தான் காந்தியடிகளை சுட்டுக் கொண்டு இயக்கம்.

3,000 கோடி செலவு செய்து சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு வான் உயர சிலை வைத்திருக்கிறார்கள். அந்த சர்தார் வல்லபாய் பட்டேல் தடை சொன்ன இயக்கம்தான் ஆர்எஸ்எஸ். கோமணம் கட்டி இருக்க வேண்டிய திருமாவளவன் நெஞ்சை நிமிர்த்தி மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறார். காரணம் அரசியலமைப்பு சட்டம் வகுத்த அம்பேத்கர்.

ஆர்எஸ்எஸ்க்கு உண்மையில் யார் மீது வெறுப்பு என்றால் முஸ்லிம் மீது அல்ல, கிறிஸ்தவர்கள் மீது அல்ல, நம் மீது அல்ல, அரசியல் அமைப்பு சட்டத்தின் மீது தான். அரசியலமைப்பு சட்டம் இல்லை என்றால் நாம் யாரும் இதில் நடமாட முடியாது. என்றார்.

இந்த பேரணியில் தமிழகம் முழுவதும் இருந்து அலை அடிப்பது போல் லட்சக்கணக்கில் விடுதலை சிறுத்தை தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணி நடந்து வந்த திருச்சியின் பழைய மதுரை சாலையில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் கூடி இருந்ததால் அந்த சாலைக்கு விடுதலை சிறுத்தை சாலை என்று பெயர் வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

“மோடி மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும்” - தொல். திருமாவளவன் எம்.பி.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும். அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார்.

இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபடும் பிரதமர் நரேந்திர மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபடும் நரேந்திர மோடி மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியத் தேர்தல் ஆணையத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா என்ற இடத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட போது நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு எதிரான நச்சுக் கருத்துக்களை தெரிவித்துள்ளார். மேனாள் பிரதமர் மன்மோகன் சிங் பல ஆண்டுகளுக்கு முன்பு கூறிய கருத்துகளை  விஷமத்தனமாகத் திரித்து இஸ்லாமியர்கள் மீது வெறுப்பு வரும் விதமாகவும் அவர்களது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாகவும் மோடி பேசியிருக்கிறார். மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைகளை மீறுவதாகவும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானதாகவும் உள்ளது.

‘காங்கிரஸ் கட்சி பொதுமக்களிடம் உள்ள தங்கம் வெள்ளி முதலான சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அவற்றை இஸ்லாமியர்களுக்கு விநியோகம் செய்யத் திட்டமிட்டு இருக்கிறது’ என அப்பட்டமான ஒரு பொய்யை மோடி பேசி இருக்கிறார். ‘உங்கள் தேர்தல் அறிக்கையில் நீங்கள் என்ன சொல்லி இருக்கிறீர்கள்?. பொதுமக்களிடம் உள்ள தங்கத்தையெல்லாம் கைப்பற்றி எல்லோருக்கும் கொடுக்கப் போவதாக சொல்லி இருக்கிறார்கள். இதே காங்கிரஸ் ஆட்சி இருந்த போது நாட்டின் வளங்களில் இஸ்லாமியர்களுக்குத்தான் முதல் உரிமை இருக்கிறது என்று சொன்னார்கள்.

அப்படியென்றால் இப்போது பறிமுதல் செய்யும் சொத்துக்களை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? நாட்டில் அதிகமாகக் குழந்தைகளைப் பெற்றுக் கொள்கிறவர்களுக்கு,  நீங்கள் உழைத்து சம்பாதித்த வளத்தையெல்லாம் ஊடுருவல் காரர்களுக்குக் கொடுப்பதாகச் சொன்னார்கள். இதை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா? நம்முடைய தாய்மார்கள் சகோதரிகள் வைத்திருக்கும் தங்கத்தை எல்லாம் தேடி கணக்கெடுப்பு செய்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்கப் போகிறார்கள். அவர்களுக்குத்தான் சொத்துக்களில் முதல் உரிமை இருக்கிறது என்று மன்மோகன் சிங் சொன்னார். இது நகர்ப்புற நக்சலைட்டின் மனோபாவம். எனது தாய்மார்களே! சகோதரிகளே! காங்கிரஸ் கட்சி உங்களுடைய தாலியைக் கூட விட்டு வைக்காது’என பிரதமர் மோடி பேசியிருக்கிறார். 

A case should be filed against Modi and investigated  Thirumavalavan MP

நமது அரசமைப்புச் சட்டத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள ஒற்றுமை மதச் சார்பின்மை ஆகிய கோட்பாடுகளுக்கு நேர் எதிரான பேச்சாக மோடியின் பேச்சு அமைந்துள்ளது. அரசியல் ஆதாயத்திற்காக மத ரீதியான வன்முறையைத் தூண்டுவதுதான் அவர்களது நோக்கம் என்பது தெளிவாகத் தெரிகிறது. பிரதமர் மோடியின் பேச்சு மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் பிரிவு 123 (3a) இன் கீழ் குற்றமாகும். இந்தப் பேச்சு தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக கடந்த மார்ச் மாதம் ஒன்றிய அரசால் வெளியிடப்பட்ட அறிவிக்கைக்கும் எதிரானதாகும். இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ, 154 பி, 298,504, 505 ஆகியவற்றின்படி இது தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். இந்திய நாட்டில் நேர்மையாகத் தேர்தல் நடத்த வேண்டுமென்றால் தேர்தல் ஆணையம் நரேந்திர மோடி மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்க வேண்டும். தேர்தல் நடத்தை விதிமுறைகளை எவரும் மீறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.