Skip to main content

அக்.7ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பா? - அமைச்சர் ஜெயக்குமார் பதில்!

Published on 02/10/2020 | Edited on 02/10/2020
fgh

 

கடந்த ஒரு மாதமாகவே அதிமுகவில் அடுத்தடுத்த அதிரடிகள் நடைபெற்று வருகின்றது. முதல்வர் வேட்பாளர் தொடர்பாக அமைச்சர்கள் தொடர்ந்து மாறுபட்ட கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதனை அடுத்து அதிமுகவில் இதுதொடர்பாக யாரும் கருத்து தெரிவிக்க கூடாது என்று ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் கூட்டறிக்கை வெளியிட்டனர். இதனை அடுத்த சில நாட்களாக அமைதியாக இருந்த இந்த பிரச்சனை கடந்த வாரம் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்தில் பூதாகரமாக வெடித்தது. பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் இருவரும் காரசாரமாக பேசியதாக தகவல்கள் வெளியாகியது. 

 

இதனையடுத்து இதுதொடர்பான விவரங்களை பேசி தீர்ப்பதற்காகக நேற்று செயற்குழு கூட்டம் அதிமுக தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முக்கியமாக வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி தெரிவித்தார். இந்நிலையில், முதல்வர் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்லவத்தை அமைச்சர்கள் மாற்றி மாற்றி சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் வரும் 6ம் தேதி அனைத்து எம்எல்ஏக்களும் சென்னை வர அதிமுக தலைமை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக பேசி அமைச்சர் ஜெயக்குமார், " கட்சி தலைமை சட்டமன்ற உறுப்பினர்களோடு பேசுவவது என்பது வழக்கமான ஒன்றுதான், கட்சியில் எல்லா நிலைகளில் ஒருமித்த கருத்து ஏற்பட்டால் வரும் 7ம் தேதி முதல்வர் வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகும். தற்போதைய சூழ்நிலையில் இதுகுறித்து தீர்க்கமாக கருத்து கூற முடியாது" என்று தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்