Tiruvallur sipcot Paint Manufacturing Factory incident

திருவள்ளூர் மாவட்டம் காக்களூரில் அமைந்துள்ள சிப்காட் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான பெயிண்ட் தயாரிப்பு தொழிற்சாலை செயல்பட்டு வந்துள்ளது. இந்தத் தொழிற்சாலையில் தற்போதுபயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத்தீ விபத்தின் போது தொழிற்சாலையின் மேற்கூரை தகடு விழுந்து ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Advertisment

மேலும் இந்தத்தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்தத்தீ விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூரில் பெயின்ட் ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

இந்நிலையில் சற்று முன் கிடைத்த தகவலின்படிபெயிண்ட் தொழிற்சாலையில் நடந்த தீ விபத்தில் மேலும்2 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதன்படி இதுவரைஉயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாகஉயர்ந்துள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. பெயிண்ட் தொழிற்சாலையில் இருந்து மேலும் ஒருவரது உடல் கருகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பலி எண்ணிக்கை மேலும் உயரக் கூடும் எனச் சொல்லப்படுகிறது.