Skip to main content

இடைக்கால பொதுச்செயலாளர்: தடைக்கோரி வழக்கு! 

Published on 21/07/2022 | Edited on 21/07/2022

 

Interim Secretary General: Prohibition case!

 


அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்படத் தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

 

அ.தி.மு.க. உறுப்பினர் என்று கூறி திண்டுக்கல் சூர்யமூர்த்தி என்பவர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவரது மனுவில், "அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட தடைக்கோரியும், அவசர கதியில் முடிவுகளை எடுக்கவும், பதவி நீக்கம், நியமனம் செய்ய தடை விதிக்க வேண்டும்" எனக் கோரியுள்ளார. 

 

அதேபோல், ஒற்றைத் தலைமையை உருவாக்குவதற்காக நிறைவேற்றிய தீர்மானங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்று பிரதான வழக்கைத் தொடர்ந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அ.தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமி வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதிக்குள் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டு, இடைக்கால மனுவை வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதிக்கும், பிரதான மனுவை வரும் செப்டம்பர் 1- ஆம் தேதிக்கும் ஒத்திவைத்தது.  

 

 

சார்ந்த செய்திகள்