வுக்கு சங்கர் என்கிற யூடியூபரை கஞ்சா வழக்கு மற்றும் காவல்துறையில் இருக்கக்கூடிய அதிகாரிகளை, பெண்களை, பத்திரிகையாளர்களை அநாகரிகமாகப் பேசினார் என கைது செய்துள்ளது காவல்துறை. சவுக்கின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. அதில் பல அதிர்ச்சிகரமான ரகசியங்கள் வெளியே வந்துள்ளன.

ss

சவுக்கு மொத்தம் 120 கோடி ரூபாய்க்கு மேல் சொத்து சேர்த்துள்ளார். சென்னை தி.நகரில் 10 கோடி ரூபாய் மதிப்பில் வீடு, லீலா பேலஸ் ஸ்டார் ஓட்டல் அருகில் சீப்ரோஸ் கிரேஸ் ஷாட் வி.வி.ஐ.பி. அபார்ட்மெண்ட் 20 கோடி, 8600 சதுரஅடி, கொட்டிவாக்கம் வீடு 40 கோடி, மேத்தா நகரில் 3500 சதுரஅடி 20 கோடி. மதுரவாயலில் கேரளா ஸ்டைலில் அனைத்து நவீன வசதிகளுடன் 1000 சதுர அடி முற்றத்துடன் வீடு 10 கோடி, அதே மதுரவாயலில் ரமணீயம் பில்டிங்கில் முறையே 7 கோடி மதிப்பில் இரண்டு பிளாட்கள். பி.எம்.டபிள்யூ மற்றும் இரண்டு சொகுசுக் கார்கள். கோடிக்கணக்கான மதிப்பில் சகல நவீன தொழில்நுட்பத் துடன் கூடிய அலுவலகம் என இவையனைத்தையும் சோதனை போட்ட போலீசார் சவுக்கை தேனியில் கைது செய்தபோது, கஞ்சா 490 கிராம் அதற்குப்பின் மொத்தம் 2 கிலோ கஞ்சாவுடன் சிக்கியுள் ளார். ஆனால் இவரது உதவியாளராக இருந்த ஒருவர் அளித்த பேட்டியில், "சவுக்கு சங்கர் கஞ்சா மட்டுமல்ல... அதற்கு மேலும் உள்ள நவீன போதைவஸ்துக் களையும் உபயோகப்படுத்துவார்' என்றார். அது பற்றிய விசாரணையில் ஒரு பெரிய நெட் வொர்க்கே போலீஸ் வலையில் சிக்கியுள்ளது.

சவுக்கு டீமினர் வேளச்சேரியில் ஒரு பிளாட் வைத்துள்ளார்கள். ஒரு அடுக்குமாடி குடியிருப் பில் 12வது தளத்தில் அமைந்துள்ள அந்த பிளாட் டுக்கு தமிழகத்தில் செயல்படும் அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகளில் சிலர் வந்து போவார்கள். காவல்துறை ரெய்டில் சிக்கும் பெண் வணிகம் செய்யும் தரகர்கள், அழகான பெண்களை அந்த பிளாட்டுக்கு அழைத்து வருவார்கள். உயர்தர வெளிநாட்டு மதுவுடன் கொக்கைன் என்கிற போதைப் பொருள் அந்த அதிகாரிகளுக்கு சரசத்துடன் பரிமாறப்படும். பாட்டு டான்சுடன் நடைபெறும் அந்த சரச பார்ட்டியின் முடிவில், யார் வீட்டுக்கு அமலாக்கத்துறை ரெய்டு செய்யப்போகிறது என்று முடிவு செய்யப்படும். அந்த நபரை சவுக்கு சங்கர் தலைமையிலான டீம் மிரட்டும். அவர் பெருந்தொகை கொடுத்தால் ரெய்டு இல்லை. அப்படி கொடுக்கவில்லை என்றால் அந்த நபர்கள் உதயநிதிக்கு நெருக்கமானவர்கள் என டெல்லி தலைமைக்கு தமிழக அமலாக்கத்துறை அதிகாரிகள் மெசேஜ் அனுப்புவார்கள். அவர்கள் மீது அமலாக்கத்துறை ரெய்டு நடத்தும். இப்படித்தான் தமிழகத்தில் மிக முக்கிய வி.ஐ.பி.க்களாக இருந்த முட்டை சப்ளையர் கிறிஸ்டி, திரைப்பட பைனான்சியர் அன்புச் செழியன், லாட்டரி மாபியா கிங் மார்ட்டின், அவரது மருமகன் அர்ஜூன்ரெட்டி ஆகியோர் மிரட்டப்பட்டார்கள். இவர்களது வீடுகளில் அமலாக்கத்துறை ரெய்டும் நடந்தது.

Advertisment

ss

பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமான திரிவேணி எர்த் மூவர்ஸ், இராமநாதபுரம் சூரிய மின் தகடு ஆலை நிறுவும் அதானி ஆகியோரை யும் சவுக்கு சங்கர் கும்பல் மிரட்டியிருக்கிறது. மணல் தொழிலை நடத்தும் ராமச்சந்திரன் என்பவர் பற்றி சமூக வலைத்தளங்களில் சவுக்கு சங்கர் எழுதி வந்தார். அவர் மீது வழக்கு பதிவு செய்தது அமலாக்கத்துறை. அவரிடம் பேசிய சவுக்கு சங்கர் 30 கோடி ரூபாய் கொடு என கேட்டிருக்கிறார். ராமச்சந்திரன் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர். சவுக்கு மீடியாவில் வேலை செய்த கார்த்திக் கோவிந்தராஜ்தான் மணல் ராமச்சந்திரனை இந்த டீமுக்கு அழைத்து வருகிறார். சவுக்கின் இந்த 30 கோடி ரூபாய் டிமாண்டுக்கு மணல் ராமச்சந்திரன் ஒத்துக் கொள்ளவில்லை. மணல் ராமச்சந்திரனை சந்திக்க நடந்த ஏற்பாடுகள் சம்பந்தமாக சவுக்கும், கார்த்திக் கோவிந்தராஜும் பகிர்ந்துகொண்ட வாட்ஸ்அப் தகவல்களை போலீசார் கைப்பற்றி யிருக்கிறார்கள்.

ராமச்சந்திரன் ஒத்துவரவில்லை என்பதால் அ.தி.மு.க. மாஜி அமைச்சர் வேலுமணியுடன் சேர்ந்து ராமச்சந்திரனுக்குப் பதிலாக இன்னொ ருவர் மணல் எடுக்கட்டும், அதற்கு ராமச்சந்திரன் ஒத்துழைக்க வேண்டும். அதில் வரும் லாபத்தை வேலுமணியுடன் சவுக்கு சங்கரும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என திட்டம் தீட்டப்பட் டது. ஆனால் அந்த திட்டத்தை அறிந்த தி.மு.க. மேலிடம், மணல் வணிகத்தை அங்கீகரிக்க வில்லை. அது இன்றுவரை பரிசீலனையில் இருக்கும் ஒரு திட்டமாகவே இருக்கின்றது.

Advertisment

இப்படி அமலாக்கத்துறையை வைத்து தமிழகம் முழுவதும் இரண்டரை வருடங்களாக கோடிக்கணக்கில் சொத்து சேர்த்த wwசவுக்கு, பல அரசியல்வாதிகளுடனும் டீலிங்கில் இருக்கிறார். எடப்பாடியுடன் டீலிங் போட்டு கோடிக்கணக் கில் பணம் பெற்றிருக்கிறார். பா.ஜ.க. தலைவரான நயினார் நாகேந்திரனின் உதவியாளர் வி.ஆர்.என். நாகராஜ் மற்றும் கரு.நாகராஜன், நாராயணன் திருப்பதி போன்றோர் சவுக்குடன் தொடர்பில் இருந்திருக்கிறார்கள். நயினாரின் நான்கு கோடி ரூபாய் சிக்கியதன் பின்னணியிலும் சவுக்கின் திருவிளையாடல் (நயினாரின் வாட்ஸ்அப் டேப்) உள்ளது.

சவுக்கு சங்கரின் செயல்பாடுகளில் இவருக்கு நெருக்கமாக செயல்பட்டவர் பெ-க்ஸ் ஜெரால்டு என்கிற பத்திரிகையாளர். அவர் சவுக்கு கைது செய்யப்பட்டவுடன் முன்ஜாமீன் கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகினார். முன்ஜாமீன் கொடுக்க உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. பெலிக்ஸின் ரெட்பிக்ஸ் நிறுவனம் ஒளிபரப்பிய சவுக்கு சங்கரின் பேட்டியில் அவர் காவல்துறையில் வேலை செய்யும் பெண்களை இழிவாகப் பேசியிருந்தார். ஏற்கெனவே ரெட்பிக்ஸில் வெளியான இன்னொரு பேட்டியில், நீதித்துறையில் வேலை செய்யும் பெண்களை இழிவாகப் பேசியிருந்தார். முந்தைய பேட்டி தொடர்பாக அவரை நீதிமன்றமே ஆறு மாதம் சிறையில் அடைத்தது. அப்பொழுது, நீதிமன்றத்தில் இனிமேல் அப்படிப் பேசமாட்டேன் என மன்னிப்புக் கேட்டு உச்ச நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டார் சவுக்கு.

ஆனால், மறுபடியும் பெலிக்ஸ் ஜெரால்டுடன் சேர்ந்து காவல்துறை உயரதிகாரி ஏ.டி.ஜி.பி .அருணையும், அவருடன் வேலை செய்யும் பெண்களை யும் கேவலமாகப் பேசினார். அதில் சவுக்கு கைது செய்யப்பட, பெலிக்ஸ் ஜெரால்டு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அதற்கான முன்ஜாமீன் வழக்கில் கருத்து தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி இதில் பெலிக்ஸ் ஜெரால்டுதான் முதல் குற்றவாளி என்றார். உயர்நீதி மன்றத்தால் ஜாமீன் மறுக்கப்பட் டது என்பது தெரிந்ததும் பெலிக்ஸ் ஜெரால்டு செல்போனை ஆப் செய்துவிட்டு டெல் லிக்கு விமானத்தில் பறந்தார். அங்கிருந்து உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவுக்கு சென்ற அவரை, அவர் தங்கியிருந்த மட்டரக மான லாட்ஜில் திருச்சி ரூரல் எஸ்.பி. வருண் குமாரின் ஸ்பெஷல் டீமைச் சேர்ந்த வீரமணி என்கிற இன்ஸ்பெக்டர் கைது செய்தார்.

"என்னை எப்படிக் கண்டுபிடித் தீர்கள்?' என்று கேட்ட பெலிக்ஸிடம் "உன்னைச் சுற்றி உள்ளவர்கள்தான் தகவல் தருகிறார்கள்' என வீரமணி சொன்ன போது, பெலிக்ஸ் ஜெரால்டு அதிர்ந்து போனார். கடும் கோடையில் ரயிலில் ஏற்றி பெலிக்ஸ் ஜெரால்டை திருச்சிக்கு கொண்டு வந்தார்கள். அவரை கைது செய்தவுடன் "என்னை பிளைட்டில் கொண்டுசெல்லுங் கள்' என கோரிக்கை வைத்திருக்கிறார் பெலிக்ஸ் ஜெரால்டு. அதை மறுத்த போலீஸ், அவரது மனைவியை தொடர்புகொண்டு கைதான தகவலை மட்டும் சொல்லச் சொல்லிவிட்டு தூக்கிக்கொண்டு வந்து விட்டது. இரண்டு வருடங்களுக்கு மேலாக தமிழகத்தில் ஒரு பெரிய அரசியல் தலைவர் ரேஞ்சில் சவுக்கு சங்கர் மிரட்டிப் பணம் கேட்டதற்கு உறுதுணையாக இருந்த அரசியல் தலைவர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகளில் சிலர், அமலாக்கத்துறை அதிகாரிகள் என பலர் சவுக்கு சங்கரின் கைதால் அரண்டுபோயிருக்கிறார்கள். அவரது இ-மெயில் மற்றும் சமூக வலைத் தளங்கள் மூலமாகப் பரிமாறப்பட்ட அனைத்துத் தகவல்களையும் அவருக்கு நெருக்கமானவர்கள் மூலமாகவே காவல்துறை கைப்பற்றிவிட்டது. "சவுக்குக்கு மிக நெருங்கிய தோழியான மாலதி என்பவரது அக்கவுண்டில் மட்டும் ஆட்டோவுக்கு மீட்டர் ஏறுவதுபோல பணம் வந்து சேர்ந்திருக்கிறது' என்கிறார்கள் காவல்துறையைச் சேர்ந்தவர்கள்.

ww

அவரது பைனான்ஸ் விசயங்கள் அனைத்தும் இன்றும் மாலதியின் கைகளில்தான் இருக்கின்றது. தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கோம்பை என்கிற ஊரைச் சேர்ந்த மாலதியின் தந்தை, திருவொற்றியூரில் தேங்காய் வியாபாரம் செய்யும் ஒரு சாதாரண வியாபாரி. மாலதி பெயரில் சென்னை தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டர் பக்கத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் வீடு வாங்கிக் கொடுத்திருக்கிறார் சவுக்கு சங்கர். மாலதி, பத்திரிகையாளரான தனது முதல் கணவரை விவாகரத்து செய்யும்போது பெற்ற தொகை வெறும் 32 லட்சம். யுடியூப் சேனல்களில் வேலை செய்த மாலதி பல கோடி ரூபாய்க்கு வீடு வாங்கியது எப்படி என்கிற கேள்வியை போலீசார் எழுப்பி வருகிறார்கள்.

இப்படி பலர் பெயர்களில் சவுக்கு சங்கர் சொத்துக்கள் வாங்கிக் குவித்துள்ளார். மிரட்டல் பணம், சொத்துக் குவிப்பு, போதை என எதற்கும் பஞ்சமில்லாது வாழ்ந்த இந்த சவுக்கு டீமில் செக்ஸ் வக்கிரங்களுக்கும் எந்தக் குறைவும் இல்லை என அதிர்ச்சித் தகவலைத் தெரிவிக்கிறார்கள் காவல்துறையினர்.

___________

யாருக்கும் உண்மையில்லாதவர்!

ssssssssssசவுக்கு சங்கர் குழுமத்திலிருந்து வெளியேறிய ப்ரதீப் என்பவர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், "முன்பு நீதிபதிகளை அவமானப்படுத்திப் பேசிய வழக்கில் பா.ஜ.க.வின் அதிகார பலத்தால் யூடியூபர் சவுக்கு சங்கர் சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்தார். வழக்கு இன்னும் முடியவில்லை. எல்.முருகன், அமர் பிரசாத் ரெட்டி, பா.ஜ.க. மா.த., கரு.நாகராஜன் போன்றவர்களால் வளர்க்கப்பட்ட கட்டிங் பார்ட்டி சவுக்கு சங்கர். அ.தி.மு.க.வின் ஐ.டி.விங் உறவில் இருந்தார். ஸ்ரீமதி வழக்கின் கள்ளக்குறிச்சி சக்தி மெட்ரிக் குலேசன் பள்ளி நிர்வாகத்திடம் கோடிக்கணக்கில் பணம் வாங்கியவர் சவுக்கு. பல முக்கியமான விசயங்களில் பணத்துக்காக நம்பிக்கைத்துரோகம் செய்வதையே தொழிலாகக் கொண்டவர் சவுக்கு. மணல் மாபியா கரிகாலன் விசயத்தில் பெரும் பணம் வாங்கியபின் அவரைப் பற்றி பேசுவதை நிறுத்தினார். பெலிக்ஸ் சவுக்கு சங்கரின் கூட்டாளி. ஜி ஸ்கொயர், காசா கிராண்டு போன்ற பல விசயங்களில் கட்டிங் போட்டார். கஞ்சா அடிப்பதில் மன்னன். யாருக்கும் உண்மையில்லாதவர் சவுக்குசங்கரை சரியான வகையில் அடக்கிய காவல்துறை நடவடிக்கை பாராட்டுக்குரியது'' என்றார்.

-சுந்தர் சிவலிங்கம்