Vignesh Sivan - Nayanthara couple on spiritual journey

விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடி, 2022ஆம் ஆண்டு ஜூனில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வாடகை தாய் மூலம் உயிர், உலக் என்ற இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அழகு சாதன பொருட்கள் விற்கும் '9 ஸ்கின்' (9 Skin) என்ற நிறுவனத்தை தொடங்கினார்கள். இதனைத் தொடர்ந்து, ஃபெமி 9 (Femi 9) என்ற சானிட்டரி நாப்கின் பொருளையும் அறிமுகப்படுத்தினர்.

Advertisment

இதனிடையே தனது குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல்சமீபத்தில் அன்னையர் தினத்தன்று நயன் தாரா வெளியிட்ட வீடியோ வைரலானது. இந்த நிலையில் இருவரும் கன்னியாகுமரியில் உள்ள பிரபல கோவில்களில் சாமி தரிசனம் செய்தனர்.

Advertisment

முதலில் நேற்று சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலுக்குச் சென்று வழிபட்ட அவர்கள், அடுத்து நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். பின்பு சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோவில் மற்றும் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து இன்று திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் மேற்கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது.