Skip to main content

பெரம்பலூர் : ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

Published on 12/09/2017 | Edited on 12/09/2017
பெரம்பலூர் : ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஜியோ ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் கி.ஆளவந்தார், ஜாக்டோ ஒருங்கிணைப்பாளர்கள் ,தமிழ்நாடு உயர் நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுக்குழு உறுப்பினர் கணேசன்,  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் அருள்ஜோதி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. 

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். ஊதியக்குழு முடிவுகளை உடனே அமுல்படுத்த வேண்டும். 01.01.2016 முதல் 20% இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். மத்திய அரசு நீட் தேர்வில்  இருந்து விலக்களிக்க வேண்டும் கோரிக்கைகளை வலியுறுத்தி 

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணைத் தலைவர் பி.தயாளன், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட  தலைவர் இ.மரியதாஸ், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் சுப்பிரமணியம், தமிழ்நாடு அரசு மருந்தாளுநர் சங் மாவட்ட தலைவர் கூத்தன், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் பெரம்பலூர் இராமராஜ், தமிழ்நாடு உயர் நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக நிர்வாகி ஸ்டாலின்,  தமிழ்நாடு வட்டார வள மைய பயிற்றுநர் சங்க நிர்வாகி மோகன், தமிழ்நாடு வேளாண்மை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மாதவன்,தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணைத் தலைவர் சரவணன், தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பெரியசாமி,  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் தெய்வராசா,தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செல்லப்பிள்ளை, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மத்திய செயற்குழு உறுப்பினர் குமரிஅனந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். 

இறுதியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க மாவட்ட செயலாளர் சா.இளங்கோவன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் 50 பெண்கள் உட்பட 250 பேர் கலந்துகொண்டனர். வேலைநிறுத்தப் போராட்டத்தில் 2000க்கும்  மேற்பட்ட  அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். 

12.09.2017 செவ்வாய் காலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. அனைத்து ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

சார்ந்த செய்திகள்