வீட்டை காலி செய்யும்படி, சிவகங்கை தொகுதி எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.
ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் முதலீடுகள் பெற தடையில்லாச் சான்று வழங்கியதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு அப்போது மத்திய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரத்தின் மகன் தொடர்புடைய நிறுவனம் உதவியதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_5', [[336, 280], [300, 250], [728, 90]], 'div-gpt-ad-1557837360420-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
googletag.cmd.push(function() { googletag.display('div-gpt-ad-1557837360420-0'); });
இந்த வழக்கில், கார்த்தி சிதம்பரத்தின் 76 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இதில், கார்த்தி சிதம்பரம் மற்றும் அவரது தாய் நளினி பெயரில் டெல்லி ஜோர் பாக்கில் உள்ள வீடும் உள்ளன. கடந்த ஆண்டு அக்டோபரில் அந்த வீட்டை அமலாக்கத்துறை முடக்கிய நிலையில் இன்னும் அந்த வீட்டை கார்த்தி சிதம்பரம் காலி செய்யவில்லை. இதனால், 10 நாட்களில் வீட்டை காலி செய்யும்படி கார்த்தி சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.