Skip to main content

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பைக் கண்டித்து வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

Published on 01/09/2017 | Edited on 01/09/2017
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பைக் கண்டித்து
வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்



புதுக்கோட்டை, ஆக.31- பெண்களுக்கு மிகவும் அத்தியாவசியத் தேவையான சானிட்டரி நாப்கினுக்குக்கூட 18 சதவிகித வரிவிதிக்கும் மக்கள் விரோத, பெண்கள் விதோர மோடி தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து புதுக்கோட்டையில் வாலிபர், மாதர் சங்கங்கத்தினர் வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அண்ணாசிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் துரை.நாராயணன், அனைத்திந்திய ஜனநாய மாதர் சங்க மாவட்டச் செயலாளர் டி.சலோமி ஆகியோர் தலைமை வகித்தனர். வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஜி.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகள் தமிழரசன், சோலையப்பன், அருண், ராஜா, மாதர் சங்க மாவட்டத் தலைவர் பி.சுசீலா மற்றும் நிர்வாகிகள் பாண்டிச்செல்வி, காயத்திரி உள்ளிட்டோர் பேசினர்.

-இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்