National SCST Commission investigation at IIT Chennai!

சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவருக்கு 3 மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி துறை பேராசிரியரிடம் புகார் கொடுத்த போதிலும் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியிருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐஐடியின் 'உள் புகார் கமிட்டி' அறிக்கை அளித்த போதிலும் ஐஐடி நிர்வாகம் தரப்பில், இந்த பாலியல் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்நிலையத்திலும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாணவி கடந்த 22/3/2022 ஆம் தேதி மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். இதுதொடர்பான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாகவும், மாணவிக்கு துணை நிற்போம் எனவும் ஐஐடி நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. அதேபோல் தேசிய எஸ்சிஎஸ்டி ஆணையத்திலும் சம்பந்தப்பட்ட மாணவியின் தரப்பில் புகாரளிக்கப்பட்டிருந்தது.

Advertisment

இந்நிலையில் சென்னை ஐஐடியில் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் குறிப்பிட்ட மாணவியிடம் விசாரணையில் ஈடுபட்ட எஸ்சிஎஸ்டி ஆணைய அதிகாரிகள் தற்பொழுது சென்னை ஐஐடிக்கு நேரில் சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். துறை பேராசிரியர், சக மாணவர்களிடம் இந்த விசாரணையானது நடைபெற்று வருவதாகதகவல்கள் வெளியாகியுள்ளது.