Skip to main content

தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள்

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
தூக்கில் தொங்கிய பட்டதாரி இளைஞன்: 
காதலியின் முறை மாமன் காரணம் கொதிக்கும் உறவினர்கள்



தனக்கு நிச்சயம் செய்யப்பட்ட முறைபெண்னை வேறு சாதிக்காரன் காதலித்ததால் நன்பன் போல பழகி அடித்து கொலை செய்துவிட்டதாகவும் அவர் காவல்துறையை சேர்ந்தவர் என்றும் இறந்த இளைஞனின் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. 

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்துள்ள ஆண்டாலம்பேட்டை பனந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் முருகன். அவரது மகன் கார்த்திக், நாடார் சமுகத்தவரான இவர், கோவிலாச்சேரியில் உள்ள தனியார் கல்லூரியில் பி,எஸ்,சி படித்துமுடித்துவிட்டு, திருநாகேஷ்வரத்தில் இரும்பு வியாபாரம் செய்துவருகிறார். கார்த்திக் கல்லூரியிம் மூன்றாம் ஆண்டு படிக்கும் போது நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள பாலையூரை சேர்ந்த வன்னியர் சமுகத்து பெண்ணான மணிமேகலை என்கிற பெண் முதலாம் ஆண்டு சேர்ந்தார். அப்போதில் இருந்து அவர்களுக்கு காதல் உருவானது. மூன்று வருடங்களாக இரண்டு பேரும் அடிக்கடி வெளி ஊர்களுக்கு பைக்கில் சுற்றியிருக்கின்றனர். இருவரும் செல்பி எடுத்து முகநூலிலும் போட்டுள்ளனர்.

பிறகு என்ன நடந்தது கார்த்திக்கின் நன்பர்களும், உறவினர்களும் கூறினர், ‘’இருவரின் காதல் விவகாரம் மணிமேகலையின் வீட்டிற்கு தெரியவர அவரை கண்டித்ததோடு, மனிமேகலைக்கு திருமணம் செய்துவைக்கவும் திட்டமிட்டு அவரது முறைமாமனான  திருச்சியை சேர்ந்த நீலமேகத்திற்கு நிச்சயம் செய்தனர். நீலமேகம் திருச்சியில் குற்றபிரிவு காவலாராக இருக்கிறார். நிச்சயத்திற்கு பிறகும் மணிமேகலைக்கும் கார்த்திக்கும் காதல் தொடர்வதை கவனித்த நீலமேகம் கார்த்திக்கை தீர்த்துக்கட்ட முடிவு செய்து, 

அவனோடு நன்பன் போல பழகினான் நீலமேகம் உங்களின் காதலை நான் சேர்த்துவைக்கிறேன் எத்தனைபேர் வந்து தடுத்தாலும் உங்களின் திருமணத்தை நான் நடத்திவைக்கிறேன் என ஒரு மாதங்களாக கார்த்திக்கிடம் நட்பாக பழகிவந்தார் நீலமேகம், 20 ம் தேதி மதியம் வீட்டில் இருந்த கார்த்திக்கை மது அருந்தலாம்னு போனில் கூப்பிட்டிருக்கிறார் நீலமேகம். மதியமா போன கார்த்திக் வீட்டிற்கு இரவு 10 மணியாகியும் வரவில்லை, செல்போனும் சுவிட் ஆப் ஆகியிருந்தது. 

இந்தநிலையில் மறுநாள காலை ஆண்டாலாம்பேட்டை மூங்கில் தோப்பில் தூக்கிட்ட நிலையில் சடலமாக இருந்தான். அவனது உடலில் சிகரட் சூடுவைத்தும், அடித்து சித்தரவதை செய்தும், காதில் விஷத்தை ஊறியும், கழுத்தில் கயத்தால் நெரித்து கொன்றிருக்கின்றனர். ‘’என்றனர் கோபத்துடன்.

இதையடுத்து திருவிடைமருதூர் அடுத்துள்ள திருநீலக்குடி காவலர்கள் குற்றபிரிவு 174  ந் படி இயற்கைக்கு மாறான மரணம் என்றும் தற்கொலை என வழக்கு பதிவித்துள்ளதாக கார்த்திக்கின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘’இந்த கொலையை போலிஸ்காரரான நீலமேகம் மட்டும் செய்யவில்லை, அவனோடு சிலர் சேர்ந்தே செய்துள்ளதாகவும் அவர்கள் யார் என கண்டுபிடித்து வழக்கு போடவேண்டும் என கோரிக்கை வைத்தனர். 

இதுகுறித்து விசாரனை காக்கிகளிடம் கேட்டதற்கு, ‘’வழக்கு போட்டிருக்கோன் வேறு கோனத்திலும் விசாரிக்க துவங்கியிருகிறோம். விசாரனை முடிந்த பிறகு தான் எது உண்மை என்று தெரியவரும்,’’என்கிறார்கள்.

-க.செல்வகுமார்

சார்ந்த செய்திகள்