Skip to main content

தடையை மீறி அரசு ஊழியர்கள் போராட்டம்

Published on 11/09/2017 | Edited on 11/09/2017
தடையை மீறி அரசு ஊழியர்கள் போராட்டம்



7-வது ஊதிய குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பது உள்பட 3 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 7-ந் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜாக்டோ-ஜியோ அமைப்பினரை ஈரோட்டில் அழைத்து பேசிய போது உடன்பாடு ஏற்படவில்லை. ஜாக்டோ-ஜியோ அமைப்பினரிடையே ஒருமித்த கருத்து ஏற்படாததால் சங்கம் 2 ஆக உடைந்தது.

இதில் 60 சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்கவில்லை என்று அறிவித்து அக்டோபர் 15-ந் தேதிக்கு போராட்டத்தை ஒத்தி வைத்தனர். ஆனால் 17 சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களது போராட்டத்துக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை தடை விதித்துள்ளது. அனாலும் தடையை மீறி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதையொட்டி ஆயிரம் ஊழியர்களுக்கு அரசு நோட்டீசு அனுப்பி உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உங்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது என்று அதில் கேட்கப்பட்டுள்ளது. ஆனாலும் நோட்டீசை பொருட்படுத்தாமல் இன்றும் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

படங்கள்: அசோக்குமார்

சார்ந்த செய்திகள்