Skip to main content

செப்.11 தேதி முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தம்

Published on 10/09/2017 | Edited on 10/09/2017
செப்.11 தேதி முதல் ஜாக்டோ - ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்தம்

பழைய ஓய்வூதிய திட்டத்தினை நிறைவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 11-ம் தேதி  முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர்  அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சர்கள் குழு மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருடன் போராட்டக் குழுவினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. ஆனால் அதில் ஒரு பிரிவினர் போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்தனர். ஒரு பிரிவினர் கடந்த சிலதினங்களில் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் நேற்று சென்னையில் நடைபெற்ற உயர்மட்டக் குழு கூட்டத்தில் ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பில் மொத்தம் உள்ள 82 சங்கங்களும் இணைந்து வரும் 11- ம் தேதி முதல்  காலவரையற்ற போராட்டம் நடத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவை மீறி ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். அரசின் வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ளுவதும் என்றும் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்