Skip to main content

"நாங்களும் போட்டியிடுவோம்ல" வேட்பாளர்களை களமிறக்கும் விவசாயசங்க அமைப்புகள்

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

நடக்க இருக்கும் நாடாளுமன்றத்தேர்தலில் அதிமுக, திமுக, அ,ம,மு,க. மக்கள் நீதிமையம், நாம் தமிழர் கட்சி என அரசியல் கட்சிகள் பல அணிகளாக  களம் காண இருக்கும் நிலையில் அவர்களை மிஞ்சும் வகையில் விவசாய சங்கங்களும், பொதுநல அமைப்புகள், சமூக ஆர்வலர்களும்  என பல அணிகளாக பிரிந்து ஆளுக்கு தலா 100 வேட்பாளர்களை களமிறக்கப்போகிறோம் என அறிவித்திருப்பது டெல்டா தேர்தல்களத்தில் பரபரப்பாகியுள்ளது.

 

 Farmers organizations that field candidates

 

கடந்த வாரம் நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பு டெல்டா மாவட்டங்களில் உள்ள தஞ்சை நாகை மயிலாடுதுறை ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளில் தொகுதிக்கு 100 பேர் வீதம் வேட்பாளர்களை களமிறக்கி தேர்தல் களத்தை போராட்ட களமாக மாற்ற திட்டமிட்டிக்கிறோம் என முதற்கட்ட வேட்பாளர்கள் 11 பேரை மயிலாடுதுறையில் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

 

அதனை தொடர்ந்து தற்போது காவிரி டெல்டா பாசனதாரர் முன்னேற்ற சங்கமோ சில கோரிக்கைகளை துணை ஆட்சியரிடம் கொடுத்து அதை நிறைவேற்றவில்லை எனில் எங்களின் சார்பில் நூறு வேட்பாளர்களை களமிறக்கி போராட்டகளமாக மாற்றுவோம் என கூறியுள்ளனர்.

 

என்ன கோரிக்கை வைத்துள்ளனர். அவர்களிடமே விசாரித்தோம், " தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், போராட்டத்திற்கான அனுமதி மறுக்கப்படுகிறது. விவசாயிகளுக்காக அறிவிக்கப்பட்ட 2017 −18 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத் தொகையை எந்த முறைகேடும் இல்லாமல் விரைவில் வழங்கப்பட வேண்டும். மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும், விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்ய வேண்டும். கல்விக் கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய வேண்டும். நிலுவையில் உள்ள கரும்புக்கான தொகையை விவசாயிகளுக்கு உடனே வழங்க வேண்டும். அரசு சர்க்கரை ஆலையான என், பி,கே,ஆர்,ஆர்  ஆலையை மீண்டும் இயக்க செய்திடவேண்டும்.  ஆறுகள் வாய்க்கால்களை தூர்வார வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்பு கடைகளை உடனே அகற்ற வேண்டும். விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை மையங்களில் தேங்கி கிடக்கின்றன இதனை உடனடியாக சம்பந்தப்பட்ட இருப்பு கிடங்கிற்கு கொண்டு செல்ல வேண்டும்.  விவசாயிகளின் பெயரால் அரசு அறிவிக்கும் அனைத்து மானியங்களையும் ரத்து செய்து நெல் விலையை குவிண்டாலுக்கு 2,500 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை தேர்தலுக்குள் நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால், வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் விவசாயிகளை வேட்பாளர்களாக நிறுத்தி போராட்ட களமாக மாற்றுவோம் என்றனர்.

 

இதேபோல் தான் கடந்த வாரம் மயிலாடுதுறையில் நிலம் நீர் பாதுகாப்பு அமைப்பு ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட மக்கள் நாசகார பிரச்சனையை மையமாக வைத்து, மூன்று தொகுதிகளிலும் 300 வேட்பாளர்களை இறக்கி தேர்தலை போராட்டக் களமாக மாற்றுவோம், அதன்மூலம் விழிப்புணர்வு அடைய செய்வோம் என வேட்பாளர்களை அறிவித்தனர்.

 

 இந்த அறிவிப்புகள் அரசியல் கட்சிகளை அதிர்ச்சியடையவே வைத்திருக்கிறது.

 

இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மற்ற தொகுதிகளை விட டெல்டா மாவட்ட தொகுதிகளில் விவசாய,மீனவ பிரச்சனையே பிரதானமாக இருக்கும் என்கிறார்கள் நடுநிலையாளர்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Tamil Nadu farmers struggle in Delhi

டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

விவசாய பயிருக்கான குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் தொடர்ந்து 2ஆவது நாளாக இன்று (24.04.2024) போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்திற்கு தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு தலைமை வகித்துள்ளார். இந்த போராட்டத்தில் 100 க்கும் மேற்பட்ட தமிழக விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது தமிழக விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜந்தர் மந்தர் பகுதியில் உள்ள மரத்தின் மீது ஏறியும், செல்போன் டவர் மீது ஏறியும் தற்கொலை செய்துகொள்ளும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை மரத்தில் இருந்தும், டவரில் இருந்தும் கீழே இறக்கி விட்டனர்.