Skip to main content

டெல்லி சென்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த நால்வருக்குப் பரிசோதனை!- சில பகுதிகளில் மக்கள் செல்வதற்குத் தடை! 

Published on 01/04/2020 | Edited on 01/04/2020


டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் சிறப்பு வழிபாட்டு கூட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த 4 பேர் கலந்து கொண்டனர். 

இவர்கள் தற்போது விருதுநகர் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, கண்காணிப்பில் உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த நால்வரும் வசித்த பேட்டைக்கடை தெரு, முஸ்லிம் தெரும், ஆத்துக்கடை தெரு ஆகிய பகுதிகள் வழியாகப் பொதுமக்கள் வெளியில் செல்லவோ, மற்றவர்கள் உள்ளே வரவோ தடைவிதித்துள்ளனர். தடுப்பு பேரிகார்டுகள் வைத்து, அந்தப் பகுதிகளைக் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
   

delhi meeting after return back virudhunagar district


வெளியூர் ஆட்களும் அங்குச் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால், அப்பகுதிகள் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு வசிக்கின்ற மக்களைச் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

சப்பாணி முத்தையா கோவில் மாசி திருவிழா அன்னதான பேனர் - அனுமதியின்றி வைத்தாக வழக்கு!

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

Case against person put up banner without permission temple festival Srivilliputhur

 

ஸ்ரீவில்லிபுத்தூர் தாலுகா கூமாபட்டியில் ஸ்ரீஅருள்மிகு சப்பாணி முத்தையா, ஸ்ரீஆறுமுகபெருமாள் கோவில் மாசி திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவில் நடைபெறும் மாபெரும் அன்னதான நிகழ்ச்சிக்கு தன்னை தொடர்பு கொள்ளுமாறு ஜே.எம்.கோஸ் என்பவர் ஃபிளக்ஸ் பேனர் வைத்திருந்தார்.

 

அரசு அனுமதி இல்லாமலும், பொது இடத்தில் அழகைக் குலைக்கும் வகையிலும் பேனர் வைத்திருந்ததாக ஜே.எம்.கோஸ் மீது கூமாபட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் ஆறுமுகசாமி அளித்துள்ள புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  

 

 

Next Story

நாள் ஒன்றுக்கு 9 ஆயிரம் பேர் மரணம்; கொரோனாவால் முடங்கிய சீனா

Published on 02/01/2023 | Edited on 02/01/2023

 

9 thousand people passed away per day; China paralyzed by Corona

 

சீனாவில் கொரோனா பரவலைத் தடுக்க அந்நாடு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா பி.எஃப்.7 வகை தொற்று அந்நாட்டு மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாகப் பாதித்துள்ளது.

 

பல்வேறு இடங்களில் முகாம் அமைத்து தீவிர பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் நாளுக்கு நாள் பரவலின் வேகம் அதிகரித்து வருகிறது. மருத்துவமனைகளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் நாள்தோறும் அனுமதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர்.

 

அதே சமயம் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் காணப்படுகிறது. சீனாவில் நாள்தோறும் 9 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிரிழப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. மருத்துவமனைகளில் சடலங்கள் அதிகரித்துக்கொண்டே இருப்பதோடு மட்டுமல்லாமல் கொரோனா தொற்று அச்சத்தினால் இறந்தவர்களின் உடல்களை வாங்குவதற்கு உறவினர்கள் தயக்கம் காட்டுகின்றனர். 

 

இது குறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.