ADVERTISEMENT

நூறுநாள் வேலைத் திட்டத்தை விரிவுபடுத்த வலியுறுத்தல்

04:08 PM Apr 25, 2018 | kalaimohan


தேசிய வேலை உறுதித் திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டுமென அகில இந்திய விவசாயத் தொழிலாளர்சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட மாநாடு வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்ட 7-வது மாநாடு செவ்வாய்க்கிழமையன்று நமணசமுத்திரத்தில் நடைபெற்றது. மாவட்டத் துணைத் தலைவர் வே.வீரையா, ஏ.பாலசுப்பிரமணியன், ஆர்.ராதா ஆகியோர் தலைமை வகித்தனர். துணைச் செயலாளர் பி.மருதப்பா கொடியேற்றினார். கே.ராஜா அஞ்சலி தீர்மானம் வாசித்தார். எம்.உடையப்பன் வரவேற்றார். மாநாட்டைத் தொடங்கி வைத்து சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஏ.லாசர் உரையாற்றினார். வேலை அறிக்கையை எஸ்.சங்கர், வரவு-செலவு அறிக்கையை கே.சண்முகம் ஆகியோர் முன்வைத்தனர்.

ADVERTISEMENT

இந்த மாநாட்டில் அனைத்து ஊராட்சிகளிலும் நிறுத்தப்பட்டுள்ள நூறுநாள் வேலைத் திட்டத்தை மீண்டும் தொடங்க வேண்டும். வேலை நாட்களை 150-ஆகவும், கூலியை ரூ.400-ஆகவும் உயர்த்த வேண்டும். இந்த திட்டத்தில் ஏரி, குளங்களை ஆழப்படுத்த வேண்டும். அனைத்துப் பேரூராட்சிகளுக்கும் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். தகுதியான அனைத்துக் குடும்பங்களுக்கும் ரேசன் அட்டை வழங்க வேண்டும். குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி, குண்டாறு இணைப்புத் திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT