காவிரி நீர் பங்கீடு பிரச்சனை குறித்து மக்களுக்கு விளக்க தமிழகம்மற்றும் கர்நாடகம்என இருதரப்பையும் சேர்ந்த வல்லுனர்களின் உதவியுடன் ஆவணப்படம் ஒன்றை எடுக்கப்போவதாக நடிகர் பிரகாஷ்ராஜ் கூறியுள்ளார்.

Advertisment

prakashraj

Advertisment

இதுகுறித்த ட்விட்டர் பதிவில் இரு மாநில விவசாயிகளின் வாழ்வாதாரமான காவிரியில் என்று அரசியல் புகுந்ததோ அன்றே காவிரி கறைபடிந்தது எனவும், எவ்வளவோ மலைகள் காடுகள் என கடந்துவந்த காவிரியால் ஓட்டு அரசியலை கடக்கமுடியவில்லை எனவும் கூறியுள்ள பிரகாஷ்ராஜ் எப்பொழுதோ தீர்க்கப்படவேண்டிய இந்த காவிரி பிரச்சனை அரசியல் நகர்வுகளுக்காக ஒத்திவைக்கப்படுகிறது எனவும் கூறியுள்ளார். மேலும் இருமாநிலத்தின் பக்கமும் நீர்பங்கீடு பற்றி தெளிவடையும் வகையில் இருதரப்புவல்லுனர்களைக்கொண்டுஆவணப்படம் எடுக்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.