காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றாமல் காலம் தாழ்த்தியதை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்குதலைமை நீதிபதிதீபக் மிஸ்ரா அமர்வின் முன் இன்று நடத்த விசாரணைக்கு வந்தது

Advertisment

அதில்காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்துவது மத்திய அரசின் கடமை ஆனால்மத்திய அரசின் காலதாமதம் வருத்தத்தை தருகிறது.

Advertisment

kaveri

ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கம் கேட்ட மத்திய அரசு, இது தொடர்பான ஒரு திட்டவரைவைக்கூடஇதுவரை உருவாக்காமல் இருப்பது காலதாமதத்திற்கான செயலாகவே உள்ளது என நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.ஸ்கீம் என்ற வார்த்தைக்கான விளக்கம் இறுதி தீர்ப்பிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த காவிரி விவகாரத்தில் இரு மாநில மக்களும் அமைதி காக்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம்அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வரும் மே மாதம் 3-ஆம் தேதிக்குள் வரைவு செயல்திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசிற்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அடுத்தமாதம் மே 3 ஆம் தேதி ஒத்திவைத்துள்ளது.

Advertisment