Skip to main content

மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம் தி.மு.க. முன்னாள் அமைச்சர் உறுதி...

Published on 12/11/2020 | Edited on 12/11/2020

 

DMK Will be rule tamilnadu again in 2021

 

 

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி தி.மு.க. எம்.எல்.ஏ. எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் கீரப்பாளையம் ஒன்றிய அலுவலகம் முன்பு கரோனா காலத்தில் தமிழக அரசு பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை இது போன்ற துறைகளில் ரூ.40,000 கோடிக்கு வைத்து ஏமாற்று வேலை செய்துள்ளது என்றும் அதை கண்டித்து கீரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தி.மு.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கூறினார்.

 

மேலும் அவர், திமுக தலைவர் ஸ்டாலின் செப்டம்பர் 17ஆம் தேதி  இணையவழி கட்சி உறுப்பினர் சேர்க்கை முகாமை துவக்கி வைத்தார். அப்போது முதல் இப்போது வரை 19 லட்சத்து 96 ஆயிரத்து 440 பேர் கட்சியில் உறுப்பினராகி உள்ளனர். கடலூர் கிழக்கு மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளில் மட்டும் 44 ஆயிரத்து 78 பேர் உறுப்பினர்களாக திமுகவில் இணைந்து உள்ளனர். தமிழக மக்கள் அதிமுக ஆட்சி மீதும் தமிழக அரசு மீது கடும் கோபத்தில் உள்ளனர் என்பதற்கு இது முன்னோட்டமாக உள்ளது. 

 

காரணம் மத்திய அரசின் குடிநீர் திட்டமான ஜல் ஜல் ஜீவன் திட்டத்தை ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் மறைமுகமாக பணிகளை செய்து, அதன் மூலம் ஊழல் செய்து வருகின்றனர். ஊராட்சிகளில் பதினைந்தாவது மாநில நிதி குழுவில் துவங்கியுள்ள பணிகள் அனைத்தும் ஊழல் நிறைந்ததாக நடந்து வருகிறது. இதில் 3 சதவீத கமிஷனை  அதிகாரிகளே வசூல் செய்கின்றனர். பொதுப்பணித் துறை, ஊரக வளர்ச்சித்துறை, உள்ளாட்சித் துறை, நெடுஞ்சாலைத் துறை என அனைத்து துறைகளிலும் கரோனா  காலத்தில் சுமார் ரூ.40,000 கோடிக்கு டெண்டர் வைத்தது ஏமாற்று வேலை, ஊழல் செய்பவர்களுக்கு வரும் தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

 

அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேறவில்லை. உள்ளாட்சிகளுக்கு உரிய நிதி ஒதுக்கவில்லை இப்படி அனைத்து நிலைகளிலும் தமிழக மக்களை ஏமாற்றி வரும் அதிமுக ஆட்சியை தமிழக மக்கள் வீட்டுக்கு அனுப்ப போகிறார்கள். விரைவில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைக்கப்படும். அப்போது மக்களின் அனைத்து  திட்டங்களும் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று கூறினார்.  

 

 

சார்ந்த செய்திகள்