mari selvaraj dhruv vikram movie update

விக்ரமின் மகனான துருவ் விக்ரம், 'ஆதித்ய வர்மா' படம் மூலம் ஹீரோவாக அறிமுகமான நிலையில், விக்ரமுடன் இணைந்து 'மகான்' படத்தில் கடைசியாக நடித்திருந்தார். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் பா. ரஞ்சித் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமானார். 2021 ஆம் ஆண்டு இந்த அறிவிப்பு வெளியான நிலையில், மாரி செல்வராஜ் மாமன்னன், வாழை என அடுத்தடுத்த படங்களில் பணியாற்றியதால் படப்பிடிப்பு தாமதமானது. மாமன்னன் வெளியானதைத்தொடர்ந்து வாழை பட பணிகளும் முடிந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இதனிடையே மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் கதை, அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்படவுள்ளதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் நீண்ட காலமாக துருவ் விக்ரம் கபடி பயிற்சி எடுத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன் இணைந்துள்ளதாக கடந்த மார்ச் மாதம் படக்குழு தெரிவித்தது. மேலும் அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் பா. ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அதோடு கபடி விளையாட்டை மையப்படுத்தி இப்படம் உருவாகி வருவதாகவும் அறிவிக்கப்பட்டது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளியிடப்பட்டுள்ளது. ‘பைசன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள நிலையில் காளைமாடன் என்ற டேக் லைனும் இடம்பெற்றுள்ளது. போஸ்டரில் துருவ் விக்ரம் கபடி வீரர் கெட்டப்பில் இடம் பெற்றிருக்க அவர் பின்புறம் பெரிய காளை மாடு சிலை அமைந்துள்ளது. இப்படத்தில் லால், பசுபதி, ரஜிஷா விஜயன், கலையரசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நிவாஸ் கே. பிரசன்னா இசையமைக்கிறார். இப்படத்தின் போஸ்டரை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த மாரி செல்வராஜ், “கால்நடையாய் நடந்து வாரான் காளமாடன் அவன் கார்மேகம் போல வாரான் காளமாடன்” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisment