மக்கள் எந்தளவுக்கு இந்திய பிரதமர் மோடி மீது வெறுப்பில் உள்ளார்கள் என்பது இந்த ஒருசம்பவம்மே சாட்சி.
திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் மத்தியரசின் வழக்குகளில் ஆஜராக இந்து முன்னணியின் முன்னாள்மாவட்ட தலைவரான வழக்கறிஞர் சங்கர் என்பவரை நியமித்துள்ளது மத்திய சட்ட அமைச்சகம்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/IMG-20190308-WA0015.jpg)
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இதற்காக அவரது நலன் விரும்பிகள், ஆதரவாளர்கள், திருவண்ணாமலை நகரம், செங்கம் உட்பட சிலயிடங்களில் சங்கரை வாழத்தி பேனர் வைத்திருந்தனர். அதில் இந்திய பிரதமர் மோடி படமும் இருந்தது.
இந்நிலையில், செங்கம் நகரில் வழக்கறிஞர் ஒருவர், இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தும், சங்கரை வாழ்த்தியும் வைக்கப்பட்டுயிருந்த பேனரில் பிரதமர் மோடியின் படத்தை பிளேடு போட்டு கிழித்துயிருந்தனர். இதைப்பார்த்து பாஜகவினர், பாஜக ஆதரவாளர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பேனரை கிழித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்மென இதுதொடர்பாக காவல்துறையில் புகார் கூறியுள்ளனர்.
போலிஸ் தரப்பிலோ, பெரிய கட்சியான திமுக, அதிமுக பேனர்களை யாராவது கிழிக்கிறார்கள் என்றால் அதன் பின்னால் ஒரு மோட்டிவ் இருக்கும். பாஜக பேனர்களை கிழிக்கும் அளவுக்கு வேறு கட்சியினருக்கு மோட்டிவ் இருப்பதாக தெரியவில்லை, சங்கருக்கும் இங்கு போட்டியாளர்களோ, எதிரிகளோ இருப்பதாக தெரியவில்லை. இது மோடியை பிடிக்காதவர்கள் செய்த வேலையாகத்தான் இருக்கும். காரணம், மோடி படத்தை மட்டும்மே குறிவைத்து கிழித்துள்ளார்கள், அதனால் தான் அப்படி முடிவுக்கு வரவேண்டியுள்ளது என்கிறார்கள்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)