Skip to main content

சிறைக்கைதி மருத்துவமனையில் உயிரிழப்பு; போராடத் தயாராகும் உறவினர்கள்!

Published on 06/05/2024 | Edited on 06/05/2024
jail inmate passed away in hospital in pudukkottai

சிறைக்கைதி மருத்துவமனையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு ஊரைச்சேர்ந்த மாங்குட்டிப்பட்டி ராஜாக்கண்ணு மகன் வெங்கடேசன் (40). இவர் அதே ஊரில் டாஸ்மாக் கடையுடன் உள்ள பாரில் வேலை செய்து வருகிறார். விடுமுறை நாட்களில் மது விற்பனை செய்ததாக இவர் மீது பல வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் மே 1 ஆம் தேதி டாஸ்மாக் கடை விடுமுறை நாளன்று மது விற்பனை செய்துள்ளார். இது தொடர்பான தகவல் போலீசாருக்கு தெரியவர, மதுவிலக்குப் பிரிவு போலீசார் வெங்கடேசனை கைது செய்ததோடு, 500 க்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.

சிறையில் இருந்த இவருக்கு 4 ந் தேதி காலை திடீரென உடல்நலக்குறைவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறைக் காவலர்கள் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் 5 ந் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு வெங்கடேசன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த தகவல் அவரது உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில் உடல் ஆரோக்கியத்துடன சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் திடீர் இறப்பில் சந்தேகம் உள்ளது. அதனால் இறப்பிற்கு சரியான காரணம் தெரியும் வரை சடலத்தை வாங்க மாட்டோம் என்று கூறும் உறவினர்கள் போராட்டங்கள் செய்யவும் உள்ளதாக கூறுகின்றனர்.

சார்ந்த செய்திகள்

 

Next Story

லாக்கப் டெத் ; ஆய்வாளர் உட்பட3 பேருக்கு சிறை தண்டனை - இன்ஸ்பெக்டர் மருத்துவமனையில் அனுமதி 

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
After 7 years of imprisonment, inspector was admitted to hospital

வேலூர் மாவட்டம்  குடியாத்ததை சேர்ந்தவர் ஆசிரியர் சுகுமார் கொலை செய்யப்பட்ட வழக்கில் குடியாத்தம் தாலுக்கா காவல் நிலையத்தில், கடந்த 01.10. 2013-ம் ஆண்டு சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக குடியாத்தம் பகுதியை சேர்ந்த முன்னாள் மத்திய பாதுகாப்பு படை வீரர் கோபி (எ) கோபால் (43) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரை மேல்பட்டி காவல்நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது,  மேல்பட்டி காவல் நிலையத்திற்கு உள்ளேயே கோபி (எ) கோபால் (லாக்கப் டெத்) உயிரிழந்தார்.

இந்த வழக்கு 2017-ம் ஆண்டு வேலூர் சிபிசிஐடி காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் காவல் ஆய்வாளர் முரளிதரன், முதன்மை காவலர் உமா சந்திரன் ஆகியோருக்கு தலா 7 ஆண்டு சிறை தண்டனையும் தலா ஒரு லட்சத்தி 70 ஆயிரம் அபராதமும், ஓய்வுபெற்ற எஸ்.எஸ்.ஐ இன்பரசனுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சத்தி 60 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து வேலூர் மாவட்ட முதன்மை மற்றும் அமர்வு நீதிமன்ற நீதிபதி முனைவர் முருகன் உத்தரவிட்டார்.

தற்போது ஆய்வாளர் முரளிதரன் வேலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கத்துறை காவல் ஆய்வாளராகவும், தலைமை காவலர் உமாசந்திரன் பரதராமி காவல் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மூன்று பேரை சிறைக்கு அழைத்து செல்லும் போது, தலைமை காவலர் உமாசந்திரன், ஓய்வு பெற்ற எஸ்.எஸ்.ஐ இன்பரசன் ஆகிய இருவரை சிறிது நேர இடைவேளை விட்டு கழிவறைக்கு செல்வதாக கூறி ஒருவர் பின் ஒருவராக காவல் துறையினர் அழைத்து சென்றனர். பின்னர் காவல் ஆய்வாளர் முரளிதரனை மற்றொரு வாயில் வழியாக அழைத்து சென்றனர். ஆனால் அங்கும் வண்டியில் ஏற்றாமல் வண்டியை மட்டும் ஒரு இடத்தில் நிற்க வைத்துவிட்டு காவல் ஆய்வாளர் வேறு ஒருவழியாக போய்  நீதிமன்ற வளாகத்தில் தனியாக நின்றுகொண்டிருந்தார். பின்னர் அவரிடத்திற்க்கு சென்று காவல் துறையினர் அழைத்து சென்றனர்.

இவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை விதித்து இருப்பதால் முறைப்படி இவர்களை சிறையில் அடைத்திருக்க வேண்டும், ஆனால் காவல்துறை அப்படி செய்யவில்லை. சிறைக்கு செல்லும் முன் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதில் தற்போது பணியில் உள்ள இரண்டு காவல்துறை கீழ்நிலை அதிகாரிகளுக்கு உடல் நலக்குறைவு இருப்பதாக மருத்துவர்கள் வழியாக சான்றிதழ் பெற்றனர். அதாவது இருவருக்கும் நெஞ்சுவலி எனச்சொல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார் எனக் கூறப்படுகிறது. இதனால் இவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்படாமல் மருத்துவமனையில் இருந்து வருகின்றனர். இதில் தண்டனை பெற்ற மூன்றாவது நபரான பணியில் இருந்து ஓய்வு பெற்ற சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் இன்பரசன் மட்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சிலைக்கு மரியாதை செலுத்திய மருத்துவக்கல்லூரி முதல்வர்!

Published on 23/07/2024 | Edited on 23/07/2024
medical college principal paid respect to statue of Dr. Muthulakshmi Reddy

முதல் பெண் மருத்துவர், சென்னை மாகாணத்தின் முதல் சட்ட மேலவை உறுப்பினர் என்று பல்வேறு "முதல்" என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி. 1886 ஜூலை 30 ம் நாள் புதுக்கோட்டை திருக்கோகர்ணம் நாராயணசாமி - சந்திரம்மாள் தம்பதிக்கு மகளாக பிறந்த முத்துலெட்சுமி ரெட்டி பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற தடைகளை உடைத்து கல்லூரிச் சென்று படித்து மருத்துவரானார். 

தொடர்ந்து தேவதாசி முறை ஒழிப்பு, குழந்தை திருமணத் தடுப்பு, விதவை மறுமணம் செய்யவும் உடன்கட்டை ஏறுதலைத் தடுக்கவும் போராடினார். பெண் கல்வி, உரிமைக்காக போராடியவர் அடையாறு புற்றுநோய் மருத்துவமனை உருவாக காரணமான இவர் 1968 ஜூலை 22 ந் தேதி மறைந்தார். 

இவரது நினைவை போற்றும் விதமாக புதுக்கோட்டையில் டாக்டர் முத்துலெட்சுமி நினைவு மாவட்ட மருத்துவமனை இயங்கியது. மருத்துவக்கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. அந்த வளாகத்தில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டிக்கு சிலை வைக்கப்பட்டது. அவரது பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் வளாகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்று(22.7.2024) அவரது நினைவு நாளையொட்டி புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி பொறுப்பு முதல்வர் டாக்டர் ராஜ்மோகன் தலைமையில் மருத்துவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.