நெய்வேலியில் டெங்கு விழிப்புணர்வு பேரணி

கடலூர் மாவட்டம் நெய்வேலியில், நெய்வேலி மருந்து வணிகர்கள் சங்கம் சார்பாக இன்று டெங்கு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. பேரணியில் வடலூர், குறிஞ்சிபாடி மருந்து வணிகர்கள் கலந்துகொண்டனர்.
பேரணியை கடலூர் மாவட்ட மருந்து ஆய்வாளர் நாராயணன், மற்றும் விருத்தாசலம் சரக மருந்து ஆய்வாளர் சிலம்புஜானகி ஆகியோர் துவக்கி வைத்தனர். பேரணியில் நெய்வேலி அரசு பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
- சுந்தரபாண்டியன்