
நாளை, பிப்ரவரி 14 ஆம் தேதி, பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக கடந்த மாதம் 31 தேதி தகவல்கள் வெளியாகி இருந்தன. அண்மையில் டெல்லி சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியானது. மெட்ரோ ரயில் விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்களைத் தொடங்கி வைக்க இருக்கிறார் என்ற தகவலும் வெளியாகியிருந்தது.
பிப்.14 தமிழகம் வரும் பிரதமர் மோடி பிரச்சாரமும் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பிப்.14 காலை 7.50 க்கு புறப்பட்டு 10.35 க்கு சென்னை வரும் பிரதமர், மூன்றுமணி நேரம் மட்டுமே சென்னையில் இருப்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. இதற்காக நாளை சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் ''நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, அரசு விழாவில் கலந்துகொள்வதால் அரசியல் பேச வாய்ப்பில்லை. கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஜெ.பி நாட்டாவும், அமித்ஷாவும்தான் ஈடுபடுவார்கள். அதிமுக - அமமுக இணைப்பு அவர்களது உட்கட்சி விவகாரம்'' என பாஜக தமிழகப் பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.