தர்மபுரி மற்றும் வேலூர் மாவட்டங்களில் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பொழிந்துள்ளது.
தமிழகத்தில் அண்மையாகவே கோடை காலம் தொடங்கி கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில் சில இடங்களில் கோடை மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டம் பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி, கடத்தூர் பகுதியில் நகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை பொழிந்தது.
தர்மபுரி மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு பிறகு ஆலங்கட்டி மழை பொழிந்ததால் கீழே விழுந்த பனிக்கட்டிகளை கையில் எடுத்து மக்கள் உற்சாகமாக மகிழ்ந்தனர். அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் சில இடங்களில் ஆலங்கட்டி மழை பொழிந்தது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.