Skip to main content

பத்திரிகையாளர்களை சிறை வைத்த இன்ஸ்பெக்டர்.

Published on 14/07/2019 | Edited on 14/07/2019

கடலூர் மாவட்டம் ராமநத்தம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி. இவர் வேப்பூர் காவல் நிலையைத்தின் பொறுப்பு அதிகாரியாகவும் உள்ளார். வேப்பூர் அருகேயுள்ள அரியநாச்சி என்ற ஊரில் கோயில் பிரச்சினையில் இரு தரப்பினருக்குள் கோஷ்டி பிரச்சினை உள்ளது. இதற்காக வேப்பூர் காவல் நிலையத்தில் இரு தரப்பினரும் புகார் கொடுத்தும் போலீஸ் உரிய நடவடிக்கை எடுத்து பிரச்சினையை தீர்க்காததால் 13- ஆம் தேதி காலை 10 மணியளவில்ஒரு தரப்பை சேர்ந்த 100க்கும் மேற்ப்பட் ஆண்கள் பெண்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போலீசை கண்டித்து தீடீர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 

 

cuddalore reporters arrest in insepctor

 

 

இந்த தகவல் கேள்விப்பட்ட தினசரி பத்திரிகை செய்தியாளர்கள் இருவர் ஆர்ப்பாட்டத்தை படம் எடுத்தனர். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் எஸ்ஐ பிரபாகரன் மற்றும் 20க்கும் மேற்ப்பட்ட போலீசார் ஆகியோர் கூட்டத்தை விரட்டியடித்துள்ளனர். அதை படம் எடுத்த அந்த இரு பத்திரிகையாளர்களிடம் ஓடிய இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி உங்களை யார் படம் எடுக்க சொன்னது என்று கடுமையான வார்த்தைகளால் திட்டி கொண்டே அவர்கள் கையில் இருந்த கேமரா செல்போன்களை பிடிங்கியுள்ளார்.

 

 

cuddalore reporters arrest in insepctor

 

 

அதை ஒரு நிருபர் தடுத்துள்ளார். இதனால் வீராவேசமான இன்ஸ்பெக்டர் இவன்களை அரஸ்ட் செய்து லாக்கப்பில் போடு என்று கடும் கோபமாக உத்தரவிட, பாய்ந்து சென்ற காவலர்கள் நிருபர்களை குண்டு கட்டாக தூக்கி கொண்டு போய் லாக்கப்பில் போட்டனர். விஷயம் தீயாய் பரவியதும் விழுப்புரம் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பத்திரிகை ஊடக நண்பர்கள் காவல் நிலையத்தில் குவிந்தனர். விஷயத்தை டிஎஸ்பி. தீபா சத்தியன், எஸ்பி அபிநவ் ஆகியோரிடம் கொண்டு சென்றனர் பத்திரிகை ஊடக அமைப்பினர். இதையடுத்து இன்ஸ்பெக்டரிடம் அதிகாரிகள் பேசியுள்ளனர். அவர்களோடு மோதல் போக்கு வேண்டாம் என்று சொல்லியுள்ளனர். ஐஜியே சொன்னாலும் ஏற்க மாட்டேன். அவர்கள் இருவரையும் வழக்கு போட்டு சிறைக்கு அனுப்புவேன் என்று இருந்தார்.

 

 

cuddalore reporters arrest in insepctor

 

 

 

20க்கும் மேற்ப்பட்ட காவலர்கள் இருக்கும்போது பெண் இன்ஸ்பெக்டர் பத்திரிகையாளர்கள் கையில் உள்ள செல்போனை ஆத்திரத்தோடு ஓடி போய் ஏன் பிடுங்க வேண்டும்? பொதுவாக போராட்டத்தின் போது பெண்களை கைது செய்ய பெண் காவலர்கள் தான் ஈடுபட வேண்டும். ஆண் காவலர்கள் ஈடுபட்டால் விபரீதமான பிரச்சினை வரும். இப்படிப்பட்ட அடிப்படை விஷயத்தை கூட தெரிந்து கொள்ளாமல் பெண் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி இருக்கிறார் என்று பத்திரிகையாளர்கள் விவாதம் செய்த பிறகும், இன்ஸ்பெக்டர் விடிவாதம் செய்ய பொருமை இழந்த பத்திரிகை ஊடகத்தினர் காவல் நிலையம் முன்பு திரண்டனர். இவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் சேர்ந்து ஆதரவு தர திடீர் ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக முடிவெடுத்தனர். இதை அறிந்த அதிகாரிகள் பிரச்சினை பெரிதாகக் கூடாது என்று மாவட்ட எஸ்பி. அபினவ் இருவர் மீதும் சிஎஸ்ஆர் பதிவு செய்ய சொல்லி பிறகு பத்திரிகையாளர்களை மாலை 4 மணியளவில் விடுதலை செய்தனர். இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரிக்கு எதிராக பத்திரிகை ஊடகத்தினர் மற்றும் அனைத்து கட்சி பொது நல அமைப்பினர் தீவிர போராட்டத்தில் இறங்க உள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வரதராஜ பெருமாள் கோவிலில் நகை திருடிய அரச்சகர்; காப்பு போட்ட காவல்துறை

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Archakar arrested for stealing jewels from Varadaraja Perumal Temple in Coimbatore

கோவை மருதமலை சுப்பிரமணிய சாமி கோவிலில் ஆண்டுதோறும் நகைகள் சரிபார்க்கும் பணி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவை இந்து சமய அறநிலை துறை நகை சரிபார்ப்பு துணை ஆணையர் விஜயலட்சுமி தலைமையில் நகை சரிபார்ப்பு பணி நடைபெற்றது. இதில் மருதமலை கோவிலின் அறங்காவலர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டு திருக்கோவிலிலுள்ள அனைத்து நகைகளையும் சரி பார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.

மருதமலை கோவிலின் உபகோவிலான கரி வரதராஜ பெருமாள் கோவில் ஒன்று உள்ளது. இந்த நிலையில் நகையை சரிபார்க்கும் பணியின் போது கரி வரதராஜ பெருமாள் கோவிலின் தினக்கூலி அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் என்பவர் அம்மனுக்கு அணிவிக்கப்படும் 14 கிராம் எடை உள்ள 7  பொன்தாலி 14 பொன்குண்டு ஊசிகள் மற்றும் 150 கிராம் எடையுள்ள வெள்ளி பூணூல் ஆகியவற்றை சரிபார்ப்பு பணிக்காக கொண்டு வந்து கொடுத்துள்ளார்.

அவற்றை அதிகாரிகள் சரிபார்த்த போது அந்த நகைகள் அனைத்தும் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவரிடம் அறங்காவலர் மற்றும் கோவில் அதிகாரிகள் விசாரணை செய்ததில் திருடியதை கோவில் அர்ச்சகர் ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அறங்காவலர்கள் குழு கொடுத்த புகாரின்படி கோவில் அர்ச்சகர் ஸ்ரீ வாத்சாங்கன் கைது செய்யப்பட்டுள்ளார்.

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.