
மதுரையைச் சேர்ந்த ரவுடி காளி என்பவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கோவை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு சிறையில் இருந்தபடியே செல்ஃபோன் பேசிய புகாரின் பெயரில், அங்கிருந்து கடந்த மாதம் திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார். திருச்சி மத்திய சிறையில் உயர்பாதுகாப்பு தொகுதி ஒன்றில் அவர் அடைக்கப்பட்டார்.
திருச்சி மத்திய சிறையில் காளியிடம் சிறைக்காவலர்கள் சிலர் அடிக்கடி ரகசியமாக பேசிவந்ததுடன், அவருக்கு உதவிகள் செய்துவந்ததாகவும் கூறப்படுகிறது. இது பற்றி அறிந்த சிறை உளவுப்பிரிவு துறையினர் உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சிறைக்காவலர் ஜெய குரு பெரம்பலூர் கிளை சிறைக்கும், சிறைக்காவலர் பிரசாத் துறையூர் கிளைக்கும், அழகுமுத்து பாபநாசம் கிளைச் சிறைக்கும் இடமாற்றம் செய்து திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி கனகராஜ் உத்தரவிட்டார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)