Skip to main content

எம்.எல்.ஏ தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்த கவுன்சிலர்கள்…

Published on 02/09/2020 | Edited on 02/09/2020

 

cuddalore

 

கடலூர் மேற்கு மாவட்டம், மங்களூர் ஊராட்சி ஒன்றி கவுன்சிலர்கள், தேர்தல் முடிந்து பல மாதங்களாகியும் தங்கள் பகுதிக்கு தேவையான எந்தவித அடிப்படை வசதியும் அரசு செய்து தரவில்லை என்று புகார் கூறியுள்ளனர். பொதுமக்களின் கோரிக்கைகளை  கேட்டறிந்த கவுன்சிலர்கள், கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளரும் திட்டக்குடி சட்டமன்ற உறுப்பினருமான சி. வெ. கணேசன் தலைமையில் கடலூர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.

 

இதில் ஒன்றிய கழக செயலாளர்கள் அடரி சின்னசாமி செங்குட்டுவன், இளைஞரணி அமைப்பாளர் கே.எம்.டி சங்கர், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர்  பொன்முடி, மாவட்ட பிரதிநிதி ராமதாஸ், துணைச் செயலாளர் தனவேல், ஒன்றிய கவுன்சிலர்கள் பிரபாகரன், கலை சிறுபாக்கம் ராமலிங்கம், செல்வி செல்வராஜ், சக்தி, காசிமணி, பாக்கியராஜ், ஆலம்பாடி சங்கர், மாவட்ட பிரதிநிதி மாங்குளம் வெங்கடேசன் உள்ளிட்ட மங்களூர் ஒன்றிய கழகத்தினர் கலந்து கொண்டனர்.

 

 

சார்ந்த செய்திகள்