Skip to main content

மது வாங்கி தரச்சொல்லி கல்லூரி மாணவர் மீது தாக்குதல்... 4 பேர் கைது! 

Published on 20/04/2022 | Edited on 20/04/2022

 

College student assaulted for buying alcohol ... 4 arrested!

 

மது வாங்கித் தராத கல்லூரி மாணவனை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்ற சில இளைஞர்கள் தாக்குதலில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பெருமாள்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சாய்குமார். இவர் மதுரவாயலில் உள்ள தனியார் பல்கலைக்கழகம் ஒன்றில் பி.காம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். நேற்று சாய்குமார் அவரது நண்பர்களுடன் சேர்ந்து அம்பத்தூர் தொழிற்பேட்டை மூன்றாவது பிரதான சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவர்கள் அருகில் அமர்ந்து மது குடித்துக் கொண்டிருந்த நான்கு நபர்கள் சாய்குமாரிடம் மருந்து வாங்கித் தருமாறு மிரட்டியுள்ளனர். அப்பொழுது கல்லூரி மாணவன் தனது நண்பர்களை செல்போனில் அழைக்க அந்த டாஸ்மாக் கடைக்கு காஞ்சிபுரம் மாவட்டம் திரௌபதி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சூர்யா என்பவர் இரண்டு மாணவர்களுடன் அந்த டாஸ்மாக் கடைக்கு வந்துள்ளார்.

 

அதற்குள் சாய்குமாரை பிடித்துக்கொண்ட 4 பேர்  மது வாங்கி தந்தால் தான் உன்னை விடுவேன் என கூறி  தாக்க முற்பட்டனர். அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் அமரவைத்து கடத்திச் சென்று சாய்குமாரிடம் இருந்து செல்போனை பறித்து கொண்டு மதுரவாயல் சாலையில் இறக்கி விட்டுச் சென்றுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், சாய்குமார் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அம்பத்தூரை சேர்ந்த மோசஸ்,கவுதம், மேற்கு முகப்பேரை சேர்ந்த பிபின் கிருஷ்ணன், கள்ளக்குறிச்சியை சேர்ந்த குமார் ஆகிய 4 பேரையும் முகப்பேரில் வைத்து கைது செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.