Skip to main content

தடையை மீறி திருச்சியில் மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது..!

Published on 02/09/2017 | Edited on 02/09/2017
தடையை மீறி திருச்சியில் மாணவர்களின் காலவரையற்ற உண்ணாவிரதம் தொடங்கியது..!



நீட் தேர்வை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு நீதி விசாரணைக்குழு அமைக்கவும், அதில் மத்திய அரசும் மாநில அரசு தான் குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கவும், நீட்த்தேர்வு ரத்து செய்யக்கோரியும், இந்த ஆண்டு எந்த வித நிபர்ந்தனையும் இன்றி கட்ஆப் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவ சீட்டு வழங்க வேண்டும் என்றும், மாநில அரசின் பாடத்திட்டத்தின் அடிப்படையிலே நுழைவு தேர்வு இருக்க வேண்டும் என்றும், தமிழக முழுவதும் மாணவர்கள் ஆர்பாட்டம், தொடர் உண்ணாவிரத்திற்கும் அழைப்பு விடுத்தும் திருச்சி கி.ஆ.பெ. அரசு மருத்துவ கல்லூரி எதிரில் அனைத்திந்திய மாணவர் மன்றம் மற்றும் திருச்சி மாவட்ட ஜல்லிக்கட்டு போராட்டக் குழுவை சேர்ந்த தினேஷ், ஜீவானந்தம், சேக்அப்துல்லா, சூர்யா, ரியாத், நிஷா உள்ளிட்ட 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போரட்டத்தை தொடங்கி உள்ளனர்.

இந்த போராட்டத்திற்கு திருச்சி காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் சி.பி.ஐ. கட்சியின் அலுவலக வாசலிலே அவர்கள் இன்று போராட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள், நீட் தேர்வை ரத்து செய் உள்ளிட்ட பதாகைகள் ஏந்திய வண்ணம் அமர்ந்திருக்கிறார்கள்.

போராட்ட குழுவினர் நம்மிடம் தமிழகத்தின் மையப்பகுதியில் இந்த உண்ணாவிரத அறப்போராட்டத்தை துவக்க புள்ளியாக நாங்கள் ஆரம்பித்திருக்கிறோம். எங்களை இந்த மத்திய மாநில அரசுகள் திசை திருப்பும் வேலைகளை செய்தால் அதற்கு எல்லாம் நாங்கள் பலி ஆகாமல் தமிழகம் இந்த தேர்வை ரத்து செய்யும் வரை எங்கள் போராட்டத்தை வலுமைப்படுத்துவோம் என்றார்கள்.

- ஜெ.டி.ஆர். 

சார்ந்த செய்திகள்