mathew samuel

எடப்பாடி பழனிசாமி மீது கொலை குற்றம் சாட்டியதற்காக சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரை தமிழக போலீசார் கைது செய்தனர். அவர்களை சிறைக்கு அனுப்ப நீதிபதி சரிதா மறுத்துவிட்டார். அவர்கள் மீது கலவரம் ஏற்படுத்த முயற்சி செய்தார்கள் என செக்ஷன் 153ன்படி வழக்கு தொடரப்பட்டது. அதனை ஏற்க நீதிபதி சரிதா மறுத்துவிட்டார்.

Advertisment

அவர்கள் மீது போடப்பட்ட வழக்கு பொய் வழக்கு, அதை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மேத்யூ சாமுவேல் வழக்கு தொடர உள்ளார். அதற்காக அவர் நாளை மறுநாள் சென்னை வருகிறார். அவரது சென்னை வருகையின்போது கொடநாடு கொலைகள் தொடர்பாகவும், அதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைவிசாரிக்க சிபிஐயை அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது தொடர்பான ஆலோசனைகளுக்காகவும் மேத்யூ சாமுவேல் சென்னை வருகிறார். சென்னை வரும் மேத்யூ சாமுவேலை கைது செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisment

mathew samuel

இதுபற்றி மேத்யூ சாமுவேல் கூறுகையில், என்னை கைது செய்யட்டும். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. கொடநாடு கொலை பற்றிய அடுத்தக்கட்ட ஆதாரங்களுடன்தான் நான் சென்னை வருகிறேன். அதை பத்திரிகையாளர்களுக்கு சென்னையில் தரஉள்ளேன் என மேத்யூ சாமுவேல் தெரிவிக்கிறார்.