Skip to main content

ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை சடலமாக மீட்பு: கதறிய பெற்றோர்

Published on 17/08/2017 | Edited on 17/08/2017
ஓடையில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தை சடலமாக மீட்பு: கதறிய பெற்றோர்

திருச்சியை சேர்ந்த அலக்ஸ், சந்தியா தம்பதிகள் தங்கள் குழந்தை ஜெனிகாசியுடன் டூவீலரில் அரியலுர் அருகேயுள்ள உறவினர் ஊரான வாரியங்காவல் வரும்போது அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் நெருஞ்சி கோரை என்ற இடத்தில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று மழை வெள்ளம் கரை புரண்டு ஓடியது. 

அப்போது எதிரே லாரி வந்துள்ளது. லாரியில் மோதாமல் இருக்க டூவீலரை தரைப்பாலத்தில் ஓரமாக ஓட்டியுள்ளார். இதில் நிலைநடுமாறி விழுந்ததில் வெள்ளத்தில் 3 பேரும் சிக்கினர். அப்போது அங்கிருந்தவர்கள் அலக்ஸ், சந்தியா ஆகியோரை வெள்ளத்தில் இருந்து மீட்டனர். குழந்தை சந்தியா வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது குறித்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த அவர்கள் இரவு முழுவதும் குழந்தையை தேடி இன்று காலை குழந்தையை சடலமாக கண்டெடுத்தனர். குழந்தையின் சடலத்தை பார்த்து பெற்றோர் கதறிய சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

எஸ்.பி.சேகர்

சார்ந்த செய்திகள்