Skip to main content

கருப்பு பேட்ஜ் அனிந்து பணிக்கு சென்ற அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள்

Published on 30/08/2017 | Edited on 30/08/2017

கருப்பு பேட்ஜ் அனிந்து பணிக்கு சென்ற
 அண்ணாமலை பல்கலைக்கழக ஊழியர்கள் 

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஊழியர்களுக்கு சரியான முறையில் சம்பளம் வழங்குவது இல்லை. ஊழியர்களுக்கு கிடைக்கவேண்டிய பயன்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்கலைக்கழக ஊழியர்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்றனர்.

இந்தநிலையில் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர், ஓய்வூதியர் கூட்டமைப்பின் தலைவர் மனோகரன், மற்றும் பொதுச்செயலாளர் பழனிவேல் மற்றும் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் புதன் கிழமை செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய மனோகரன் பல்கலைக்கழகத்தில் கடந்த சில மாதங்களாக சம்பளத்தை 15 நாட்கள் காலம் தாழ்த்தி வழங்கி வருகிறார்கள்.,மாதத்தின் இறுதி வேலைநாட்களில் வழங்க வேண்டும். 

பல்கலைக்கழகத்தை அரசு கட்டுபாட்டில் எடுத்த பிறகு ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கபடவில்லை. பல ஆண்டுகளாக தொகுப்பு ஊதியத்தில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும். பணி நிரவலுக்கு சென்றுள்ள ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு, மருத்துவ விடுப்பு உள்ளிட்டவைகளை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 தமிழக அரசு பல்கலைக்கழகத்தை ஏற்பதற்கு முன் நிதி பற்றாகுறை ரூ150 கோடி தான், தற்போது 1500 கோடியாக அதிகரித்துள்ளது. இதற்கு அரசு சரியான நடவடிக்கை எடுக்காதது தான் காரணம்., எனவே அரசு சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்து பல்கலைக்கழகதை காக்கவேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை நிரைவேற்றகோரி  உயர்கல்வி துறை செயலாளர், துணைவேந்தர். பதிவாளர் உள்ளிட்ட சம்பந்தபட்டவர்களிடம் கொடுத்துள்ளோம். இதனை நினைவுபடுத்தும் விதமாக 30, 31 என இரு நாட்கள் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு செல்கிறோம். இனியும் கால தாமதம் செய்தால் அனைத்து ஊழியர்கைளையும் ஒருங்கிணைத்து மிகபெரிய போராட்டத்தை தொடர்ந்து நடத்துவோம் என்றார்.    

- காளிதாஸ்

சார்ந்த செய்திகள்