அனிதா மரணத்திற்கு நீதி கேட்டு நாகை, சீர்காழியில் கல்லூரி மாணவர்கள் பேரணி, போராட்டம் (படங்கள்)

நாகை மாவட்டம் நாகை புத்தூர் பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரி, சீர்காழி பெஸ்ட் கல்லூரி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பாக, மறைந்த மாணவி அனிதாவிற்க்கு நியாயம் கேட்டும், நீட் தேர்வினை முழுமையாக விலக்கு கோரி வகுப்பு பறக்கணித்து பேரணி ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
கல்லூரியில் இருந்து பேரணி சென்றபோது புத்தூரில் அண்ணாசிலை அருகில் காவல்துறை தள்ளுமுள்ளில் ஈடுப்பட்டனர். பிறகு பிரதான சாலை வழியாக நாகை புதிய பேருந்து நிலையம் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சீர்காழியில் பெஸ்ட் கல்லூரியிலிருந்து பேரணி புறப்பட்டு முக்கிய சாலை வழியாக புறப்பட்டு செல்லூம் போது தென்பாதி சினிமா தியேட்டர் அருகே காவல்துறை மறித்து தள்ளுமுள்ளில் ஈடுப்பட்டனர். இப் போராட்டத்திற்க்கு SFI மாவட்ட செயற்குழு உறுப்பினர் புருஷோத்தம்மன் தலைமை வகித்தார், மாவட்டக்குழு உறுப்பினர் கபிலன்,மணிமாறன், சுர்ஜித் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
செல்வக்குமார்