மாணவி அனிதாவின் உடலுக்கு கி.வீரமணி நேரில் அஞ்சலி: குடும்பத்தினருக்கு நிதி உதவி

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், குழுமூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி அனிதா மருத்துவ படிப்பில் சேர முடியாத விரத்தியில் தற்கொலை செய்து கொண்டார். குழுமூரில் உள்ள மாணவி அனிதாவின் உடலுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அனிதாவின் குடும்பத்தினருக்கு ரூபாய் ஒரு லட்சம் இழப்பீடு வழங்குவதாக தெரிவித்தார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், குன்னம் தொகுதியின் முன்னாள் திமுக எம்எல்ஏ சிவசங்கர் ஆகியோர் உடனிருந்தனர்.
-எஸ்.பி.சேகர்