Skip to main content

“இருப்பைக் காட்டத்தான் பேசுவார்கள்; உண்மையைச் சொல்ல மாட்டார்கள்” - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்

Published on 06/11/2022 | Edited on 06/11/2022

 

“They speak only to show their presence; They will not tell the truth” - Minister K.K.S.S.R

 

இன்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள பிளவக்கல் அணையில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்நிகழ்வில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் கலந்து கொண்டார்.

 

அப்போது அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஒரு பக்கம் அரசியல் சவால் ஒரு பக்கம் இயற்கை சவால் இரண்டையும் முதல்வர் சந்திக்கிறார். கடந்த ஆட்சியில் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் பல பகுதிகளில் மழை நீர் தேங்கி இருக்காது. அதிமுகவினர் அவர்களது இருப்பை காட்டுவதற்காகப் பேசுகிறார்களே ஒழிய உண்மை நிலவரத்தை அவர்கள் சொல்வதற்கு ரெடியாக இல்லை. 

 

எல்லாரும் காண்ட்ராக்ட் விட்டுத்தான் வேலை செய்ய வேண்டும். எந்த கால்வாய் எங்கு கட்ட வேண்டும். எந்த இடத்தில் தண்ணீர் செல்லுகிறது. வெளியேறி செல்லும் தண்ணீருக்கு நாம் எவ்வாறு துவாரம் அமைக்கப்போகிறோம். இது எல்லாம் தொழில்நுட்ப வேலைகள். நாம் அவர்களிடம் பணத்தை கொடுத்து விட்டு வேறு வேலைகள் பார்ப்பது சரியல்ல. 

 

முதல்வர் ஸ்டாலின் அனைத்திற்கும் கமிட்டி போட்டு ஒவ்வொன்றையும் தரமாக ஆராய்ந்ததால் தான் இவ்வளவு மழை வந்தும் தண்ணீர் எங்கும் தேங்காமல் கால்வாய்கள் மூலம் சென்றுள்ளது.

 

மேலும் மேற்கு தொடர்ச்சி மலை சரிவில் இருக்கும் பிளவக்கல் மற்றும் ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றுலாத் தளமாக மாற்ற முயற்சி செய்து வருகிறோம்” எனக் கூறினார்.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நிர்மலா தேவி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Judgment postponed in Nirmala Devi case

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி, மாணவிகளைத் தவறான பாதைக்கு அழைத்ததாகக் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதற்காக மாணவிகளிடம் பேரம் பேசியதாக கடந்த 2018 ஆம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டிருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் அவருக்கு உதவியதாக பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன்பின்னர் முருகன், கருப்பசாமி ஆகியோருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கி இருந்தது.

இத்தகைய சூழலில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மகிளா நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் இன்று (26.04.2024) தீர்ப்பு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையொட்டி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.

உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும். இந்த வழக்கில் 29 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும்” எனத் தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தார். 

Next Story

“வெயில்ல தலைச்சூடா ஆயிப்போச்சுப்பா!”-சுடச்சுட அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். பிரச்சாரம்

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
 "Don't get too hot!"- Minister K.K.S.S.R. Propaganda

நாட்டின் 18 வது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்பில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் இந்தியா கூட்டணியின்  காங்கிரஸ்  வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பரப்புரை செய்தார்.  

அப்போது பேசிய அவர், “உங்களைப் பார்க்கிறதுக்காக வந்திருக்கோம். நீங்க யாருக்கு ஓட்டு போடப் போறீங்க? எங்களுக்குத்தான் ஓட்டுப் போடப் போறீங்க. நாங்க உங்கள பார்க்காம இருந்தோம்னு வச்சிக்கங்க.. வைவீக. இந்தப் பயலுகளுக்கு எவ்வளவு மப்பு இருந்தா ஓட்டு கேட்க கூட வரலைன்னு வைவீக. அதுக்காகத்தான்.. மாணிக்கம்.. கொஞ்சம் வெயிலா இருந்தாலும் பரவாயில்லன்னு கூட்டிட்டு வந்திருக்கேன்.  தலைச்சூடா ஆயிப்போச்சுப்பா. எல்லாரும் பார்த்தீங்கன்னா நம்ம சொந்தங்கதான். பார்க்காதவங்க கிடையாது. சாத்தூர்ல இருக்கிற அத்தனை பேரும் எனக்கு சொந்தக்காரங்கதான். சொந்தங்கள் என்ற உரிமையில்தான் உங்ககிட்ட ஓட்டு கேட்க வந்திருக்கோம். உங்களுக்கு வேண்டியது எல்லாத்தையும் செஞ்சு கொடுக்கிறோம். எல்லாரும் கை சின்னத்துக்கு ஓட்டு போடுங்க” என்று வாக்கு சேகரித்தார்.