
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூட்டிய பொதுக்குழுவைச் செல்லாது என அறிவிக்கக் கோரி முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி ஜெயச்சந்திரன் அளித்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனுவின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்துள்ளது நீதிமன்றம்.
நேற்று சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் விடுதியில் ஓபிஎஸ் அவரது ஆதரவாளர்கள் மேற்கொண்ட ஆலோசனை கூட்டத்தில் கலந்துகொண்ட திரைப்பட இயக்குனர் பாக்யராஜ் ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைத்திருந்தார். இந்நிலையில் எடப்பாடி அணியை ஆதரித்து வந்த உசிலம்பட்டி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தற்பொழுது ஓபிஎஸ் உடன் ஆலோசனை மேற்கொண்டு வந்த நிலையில் அவர் தற்பொழுது ஓபிஎஸ் அணியை ஆதரித்துள்ளார்.
ஓபிஎஸ் உடன் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்த ஐயப்பன் ''என்னைப்போன்று மற்ற எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் உடன் இணைவார்கள்'' என்றார்.
பின்னர் பேசிய ஓபிஎஸ், ''அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே தொண்டர்களின் நிலைப்பாடு. பொதுக்குழு என்ற பெயரில் எடப்பாடி அணியினர் நாடகம் நடத்தி உள்ளனர். இதற்கு முன்புஎம்ஜிஆர் மறைவின் பொழுது ஜானகி அணி என்றும் ஜெயலலிதா அணி என்றும் இரண்டு பிரிவுகளாக பிரிந்து தேர்தலை சந்தித்து வெற்றி வாய்ப்பு இழந்திருக்கிறோம். வெற்றி வாய்ப்பை இழந்த உடனே தலைவர்கள் இணைவதற்கு முன்பாகவே தொண்டர்கள் இணைந்து விட்டார்கள். அதிமுகவின் விசுவாசமிக்க தொண்டர்கள் என்று நிரூபித்து காட்டினார்கள். அது போலதான் இன்றைக்கும் உண்மை நிலையை அறிந்ததற்கு பின்னால் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து இணைய வேண்டும் என்ற கருத்து வலுப்பட்டு கொண்டிருக்கிறது. இறுதியாக மாவட்டம் தோறும் இணைப்பை வலியுறுத்தி புரட்சி பயணம் தொடருவோம். இந்த சட்டமன்ற உறுப்பினர் ஆதரவளித்தது போன்று மேலும் பலர் வருவார்கள். அது பரம ரகசியம்'' என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)