Skip to main content

ஒரு கோடி மதிப்பிலான ரூ. 2000 நோட்டுகள்; அமலாக்கத்துறை அதிரடி

Published on 22/06/2023 | Edited on 22/06/2023

 

Rs.2000 notes worth one crore; Enforcement action

 

பணப் பரிமாற்ற மோசடி வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறையினர் குஜராத், மஹாராஸ்டிரா ஆகிய மாநிலங்களில் நடத்திய சோதனைகளில் சுமார் 1.62 கோடி ரூபாய் பறிமுதல் செய்தார்கள்.

 

குஜராத்தை சேர்ந்தவர் சுரேஸ் ஜக்குபாய் படேல்.  இவருக்கு  கேதன் படேல், விபுல் படேல், மீதன் படேல் எனக் கூட்டாளிகள் இருந்துள்ளனர். மேலும், இவர்கள் மீது ஆள் கடத்தல், கொலை, சாராயம் கடத்தல் போன்று 35க்கும் மேற்பட்ட வழக்குகள் குஜராத், மஹாராஸ்டிரா மற்றும் டாமன் காவல் நிலையங்களில் பதிவாகியுள்ளன. டாமனில் நடந்த இரட்டைக் கொலை வழக்கில் காவல்துறையினர் இவர்களைக் கைது செய்துள்ளார்கள்.

 

இந்நிலையில், இவர்களை அமலாக்கத்துறையினர் பணப் பரிமாற்ற மோசடியின் கீழ் வழக்குப் பதிவு செய்து இவர்களின் வீடுகள், அலுவலகங்கள் போன்ற இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர். அந்த சோதனையில் 1.62 கோடி ரூபாய், 100க்கும் மேற்பட்ட சொத்து பத்திரங்கள், பண மோசடி செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் மூன்று வங்கி லாக்கர் சாவிகளையும் கைப்பற்றியுள்ளனர். மேலும் அதில் 1 கோடி மதிப்பிலான தடை செய்யப்பட்ட பழைய 2000 ரூபாய்கள் இருந்துள்ளன. அதனையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்