Skip to main content

"இளைஞர்களுக்கு" வேண்டுகோள் விடுத்த பிரதமர் நரேந்திர மோடி!

Published on 29/09/2019 | Edited on 29/09/2019

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலி வழியே “மன் கி பாத்” (மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசினார்.
 

அப்போது, பெண்களின் உழைப்பு மற்றும் சாதனைகளை கொண்டாடும் விதமாக, ‘பாரத் கீ லட்சுமி’ "இந்தியாவின் லட்சுமிகள்" என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி, அதில் பெண்களின் சாதனைகளை பதிவிடுமாறு நாட்டு மக்களை பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். மகாத்மா காந்தியின் 150- வது பிறந்தநாளின் போது ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கின் உபயோகத்தை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

MANNKI BAAT PROGRAM PM NARENDRA MODI REQUEST FOR OUR COUNTRY YOUNGSTERS


புற்றுநோய், நீரிழிவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களுக்கு வழிவகுக்கும், இ சிகரெட் மற்றும் புகையிலை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் விடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இ சிகரெட்டுகள் உயிருக்கு கேடு விளைவிப்பவை என்று தெரிவித்த மோடி, அவை தொடர்பாக இளைஞர்களுக்கு போதிய விழிப்புணர்வு இல்லை என்று குறிப்பிட்டார். புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி விட்டால் அதில் இருந்து விடுபடுவது கடினம் என்று கூறிய அவர், நிக்கோட்டினால் மன வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் எடுத்துரைத்தார்.
 

எனவே இளைஞர்கள் புகையிலைப் பழக்கத்தில் இருந்து இ சிகரெட்டுகள் பயன்பாட்டில் இருந்தும் விடுபட வேண்டும் என்றும் ஆரோக்கியான இந்தியாவைப் படைக்க வருமாறும் வலியுறுத்தினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இந்தியாவை உலக நாடுகள் முன் மாதிரியாக எடுத்துக் கொண்டுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். மேலும் நாட்டு மக்களுக்கு நவராத்திரி மற்றும் தீபாவளி திருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டார்.  

சார்ந்த செய்திகள்

 

Next Story

IND vs ZIM : ஜிம்பாப்வேவை வீழ்த்தி சாதனைப் படைத்த இந்தியா!

Published on 10/07/2024 | Edited on 10/07/2024
IND vs ZIM : India beat Zimbabwe to record

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. அதன்படி கடந்த 6 ஆம் தேதி (06.07.2024) நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. இதனையடுத்து 7 ஆம் தேதி (07.07.2024) நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என இந்தியா அணி சமன் செய்திருந்தது.

இந்நிலையில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டி20 போட்டி இன்று (10.07.2024) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்கியது. 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 182 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 49 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் ருதுராஜ் கெயிக்வாட் 28 பந்துகளில் 49 ரன்களும், ஜெய்ஸ்வால் 27 பந்துகளில் 36 ரன்களும் எடுத்தனர்.

இதன் மூலம் ஜிம்பாப்வே அணிக்கு 183 ரன்களை இலக்காக இந்திய அணி நிர்ணயித்தது. அதன் பின்னர் 183 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களமிறங்கியது. இறுதியாக 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் இந்திய அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் இந்த போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் 150 வெற்றிகளை ஈட்டிய முதல் அணி என்ற சிறப்பையும் இந்தியா பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரின் 4வது போட்டி வரும் 13ஆம் தேதி (13.07.2024) நடைபெற உள்ளது. 

Next Story

நெருங்கும் ஒலிம்பிக் திருவிழா; இந்தியா வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

Published on 09/07/2024 | Edited on 09/07/2024
 the approaching Olympic festival; Important announcement

சர்வதேச விளையாட்டுத் திருவிழாவான 33வது ஒலிம்பிக் போட்டி வருகிற ஜூலை 26ஆம் தேதி, பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடைபெற உள்ளது. ஜூலை 26ஆம் தேதி தொடங்கும் இந்த ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 11ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தச் சர்வதேச போட்டியில், உலகம் முழுவதும் உள்ள 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

இந்நிலையில் ஒலிம்பிக் தேசியக் கொடியை பி.வி.சிந்து ஏற்றுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஐந்து முறை ஒலிம்பிக் பங்கேற்பாளராக இருந்த சரத் கமல் தேசியக்கொடி ஏந்தி செல்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஒலிம்பிக் தேசியக் கொடியை பி.வி.சிந்து ஏற்றி வைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியின் தலைவராக மேரி கோம் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது துப்பாக்கி சுடுதல் வீரர் ககன் நரங் தலைவராக செயல்படுவார் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

 the approaching Olympic festival; Important announcement

இந்த ஒலிம்பிக் போட்டியில் மகளிர் வீராங்கனைகளை பி.வி.சிந்து வழி நடத்துவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சார்பில் பங்கேற்கும் தடகள வீரர்கள் மற்றும் பேட்மிட்டன் போட்டி வீரர்களுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு இன்னும் இருபது நாட்களே இருக்கக்கூடிய நிலையில், பல்வேறு தடகளவீரர்கள் தங்கள் இறுதிக் கட்ட பயிற்சிக்காக வெளிநாடுகள் சென்றுள்ளனர். இந்நிலையில் இந்த இரண்டு முக்கிய அறிவிப்புகளை இந்திய ஒலிம்பிக் சங்கம் வெளியிட்டுள்ளது.