Central govt should stop supporting NEET CM insists 

இளநிலை மருத்து படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்ததாகக்கூறப்படுகிறது. இது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் தொடர்ந்து வருகின்றன. இத்தகைய சூழலில் தான் குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள ஒரு மையத்தில் நடைபெற்ற தேர்வில் முறைகேடு செய்ததாகக் கூறி பயிற்சி மையத்தின் தலைவர் உட்பட 5 பேரை குஜராத் போலீஸார் கைது செய்துள்ளனர்.

Advertisment

இது தொடர்பான ஆங்கிலசெய்தியைக்குறிப்பிட்டு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தனதுஎக்ஸ்சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நீட் தேர்வுதொடர்பாகச்சர்ச்சைகள் அதன் அடிப்படையில் சமத்துவமின்மை தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. பல்லாயிரம்ஆண்டுகளாகக்கல்வி மறுக்கப்பட்டு வரும் சமுதாயத்தில், ஒடுக்கப்பட்டோர் முன்னேற்றத்திற்கு அதிக வாய்ப்புகளை வழங்க வேண்டும். மாறாக, அத்தகைய மாணவர்களின் வாய்ப்பை நீட் தேர்வு தடுக்கிறது. தேசிய தேர்வு முகமைக்கு (NTA) மத்திய கல்வி அமைச்சர் ஆதரவு தெரிவித்த போதிலும், சமீபத்திய நிகழ்வுகள் தேசிய தேர்வு முகமை வித்தியாசமானமுகத்தைக்காட்டுகின்றன.

Advertisment

Central govt should stop supporting NEET CM insists 

பல கோடி ரூபாய் மதிப்பிலான காசோலைகள் மற்றும் எட்டு வெற்று காசோலைகளை உள்ளடக்கிய பணப்பலன்களுக்காக ஓ.எம்.ஆர். தாள்களைத்தேர்வு கண்காணிப்பாளர்கள் திருத்தியதாக குஜராத் காவல்துறை முதல் தகவல் அறிக்கைகை (எஃப்ஐஆர்) பதிவு செய்துள்ளது. பள்ளியின் முதல்வர், இயற்பியல் ஆசிரியர் மற்றும் பல நீட் பயிற்சி மையங்கள் சம்பந்தப்பட்ட இந்த சதி, நீட் தேர்வு தொடர்பாக முறையான மாற்றத்திற்கான அவசரத் தேவையை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

மாணவி அனிதா முதல் எண்ணற்ற மாணவர்கள் வரை பரிதாபகரமாகத் தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டதை நாம் நேரில் பார்த்திருக்கிறோம். தகுதியின் அளவுகோலாகக் கருதப்படும் நீட் தேர்வு, சமூகத்தின் அனைத்து மட்டங்களையும் பாதிக்கும் ஒரு பரவலான மோசடியாக மீண்டும் மீண்டும் தன்னை வெளிப்படுத்தியுள்ளது. இந்த மாணவர் விரோத, சமூக நீதிக்கு எதிரான, ஏழைகளுக்கு எதிரான நீட் தேர்வை ஆதரிப்பதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment