Skip to main content

அருந்ததி ராய் மீது பாயும் உபா சட்டம்; மஹுவா மொய்த்ரா காட்டம்

Published on 15/06/2024 | Edited on 15/06/2024
Mahua Moitra condemns about law flowing over writer Arundhati Roy

அதிகாரத்திற்கு எதிராக மக்கள் படும் இன்னல்களை நேரடியாகக் களத்திற்குச் சென்று ஆய்வு செய்து அவர்களின் வலியைக் கட்டுரை மூலமாகவும், தனது பேச்சின் மூலமாகவும் அருந்ததி ராய் என்ற எழுத்தாளர் வெளியுலகத்திற்கு தெரியப்படுத்தி வருகிறார். இவருக்கு கடந்த 1997 ஆம் ஆண்டு புனைவு இலக்கியத்திற்காக எழுத்தாளர்களுக்காகக் கொடுக்கப்படும் உலகின் மிக உயரிய விருதான ‘புக்கர் விருது’ கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில், இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஒரு மாநாட்டில் பங்கேற்று, ‘காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக எப்போதும் இருந்ததில்லை. வலுக்கட்டாயமாகக் காஷ்மீர் இந்திய ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில சுதந்திரத்திற்குத் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்’ என்று அருந்ததி ராய் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் இந்த மாநாட்டில் மத்திய பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியர் ஷேக் சவுகத் ஹுசைனும் கலந்துகொண்டு பேசியுள்ளார்.

இது குறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் எழுத்தாளர் அருந்ததி ராய் மற்றும்  ஷேக் சவுகத் ஹுசைன் ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து இந்த வழக்கு குறித்த விசாரணை டெல்லி மெட்ரோ பொலிட்டன் நீதிமன்றத்தில் நிலுவையிலிருந்து வருகிறது. இதனிடையே, இவர் மீது சட்ட விரோத தடுப்பு சட்டத்தின் கீழ் (UAPA) நடவடிக்கை எடுக்க டெல்லி துணைநிலை ஆளுநர் வி.ஜி. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

Mahua Moitra condemns about law flowing over writer Arundhati Roy

எழுத்தாளர் அருந்ததி ராய் மீது எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைக்கு எதிராக அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி மஹுவா மொய்த்ரா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, “அருந்ததி ராய் மீது உபா சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்ததன் மூலம் அவர்கள் திரும்பி வந்துவிட்டார்கள் என்பதை நிரூபிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறது. ஆனால், அதுதான் இல்லை. அவர்கள் முன்பு இருந்ததைப் போல ஒருபோதும் திரும்பி வர முடியாது. இந்தப் பாசிசத்திற்கு எதிராகத்தான் இந்தியர்கள் வாக்களித்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் மஹுவா மொய்த்ரா மீது வழக்கு!

Published on 08/07/2024 | Edited on 08/07/2024
Case against Mahua Moitra under new criminal law

தேசிய மகளிர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் ரேகா சர்மாவை திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, தனது எக்ஸ் சமூக வலைதளபக்கத்தில் அவமதிக்கும் வகையில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.  இந்த விவகாரம் குறித்து குற்றச்சாட்டு எழுந்த நிலையில், மஹுவா மொய்த்ராவை புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் கைது செய்து, அடுத்த மூன்று நாட்களுக்குள் விசாரணை அறிக்கையை சமர்பிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்திருந்தது. 

தேசிய மகளிர் ஆணையத்தின் கருத்திற்கு, “டெல்லி போலீசார் என்னை மூன்று நாட்களுக்குள் கைது செய்ய வேண்டும் என்றால், நான் படியா பகுதியில் தான் இருக்கிறேன் என்பதை தெரிவித்துகொள்கிறேன்” என்று மஹுவா மொய்த்ரா கூறியுள்ளார். இந்த நிலையில்தான் டெல்லி போலீசார், மஹுவா மொத்ரா எம்.பி. மீது புதிய குற்றவியல் சட்டப் பிரிவு 79-ன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இதனிடையே ரேகா சர்மா வெளியிட்டிட்டிருந்த சில சர்ச்சைக் குரிய பதிவுகளை பகிர்ந்த மஹுவா மொய்த்ரா, என் மீது வழக்குப்பதிவு செய்யும் அதேசமயத்தில் மற்றொரு குற்றவாளிக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்திருக்கிறார். இந்த விவகாரம் தற்போது பேசுப்பொருளாக மாறியிருக்கிறது. 

Next Story

“மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளது” - மஹுவா மொய்த்ரா எம்.பி!

Published on 01/07/2024 | Edited on 01/07/2024
Mahua Moitra MP talks about manipur issue in loksabha

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் கடந்த 26 ஆம் தேதி (26.06.2024) நடைபெற்றது.

இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கடந்த 27 ஆம் தேதி (27.06.2024) உரையாற்றினார்.  இத்தகைய சூழலில் தான் நாடாளுமன்ற மக்களவையில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராகுல் காந்தி முதல் முறையாக இன்று (01.07.2024) உரையாற்றினார்.

இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா மணிப்பூர் விவகாரம் தொடர்பாக மக்களவையில் உரையாற்றுகையில், “மணிப்பூரில் ரத்தக்கறை படிந்துள்ளதை நேரில் சென்று பாருங்கள். ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு. கடந்த முறை நான் இங்கு நின்றபோது பேச அனுமதிக்கப்படவில்லை. ஆனால் ஒரு எம்.பி.யின் குரலை நசுக்கியதற்கு ஆளுங்கட்சி பெரும் விலை கொடுத்தது. என்னை ஒடுக்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக பொதுமக்கள் உங்கள் 63 உறுப்பினர்களை நிரந்தரமாக உட்கார வைத்துவிட்டனர்” எனப் பேசினார். கடந்த முறை எம்.பி. பதவி பறிக்கப்பட்ட நிலையில் மஹூவா மொய்த்ரா நடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுவந்து மக்களவையில் உரையாற்றியது குறிப்பிடத்தக்கது.