Skip to main content

மணல் குவாரி, விருது பெயர், ஆங்கில கல்வி, வீட்டு செலவு... தொடர் சர்ச்சைகளில் சிக்கித்தவிக்கும் ஜெகன்...

Published on 07/11/2019 | Edited on 07/11/2019

ஆந்திர மாநில முதல்வராக பொறுப்பேற்ற ஜெகன்மோகன் ரெட்டி தொடர்ந்து அடுத்ததடுத்த மக்கள் நல திட்டங்கள் மூலம் பலரது பாராட்டுகளையும் பெற்று வந்தார். ஆனால் சமீபகாலமாக ஜெகனை சுற்றி சர்ச்சைகள் அதிகளவில் சூழ ஆரம்பித்துள்ளன எனலாம்.

 

jaganmohan reddy controversies

 

 

மணல் குவாரிகள் தொடர்பான விதிமுறைகள் அம்மாநிலம் முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அப்துல் கலாமின் பெயரால் வழங்கப்பட்டு வந்த ஆந்திர அரசின் மாநில விருதினை தனது தந்தை பெயரில் வழங்கப்படும் என அறிவித்தது அதை விட மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இவைகளின் தாக்கம் அடங்குவதற்குள்ளாகவே ஆந்திர அரசு பள்ளிகளில் ஆங்கில வழியில் கல்வி கற்பிக்கப்படும் என அறிவித்து மீண்டும் சிக்கலில் சிக்கினார் ஜெகன்மோகன். இதற்கு அம்மாநிலம் முழுவதும் கடுமையான எதிர்ப்பு எழுந்து வருகிறது. இந்த சூழலில் தற்போது இன்னொரு விஷயம் ஜெகன்மோகனை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

கடந்த 5 மாதங்களில் ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டு பராமரிப்பு  பணிக்காக ரூ.15.6 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக சந்திரபாபு நாயுடு கூறியதுடன், அதுதொடர்பான சில புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன்படி ஜன்னல் பொருத்த ரூ.73 லட்சம், சாலை அமைக்க ரூ.5 கோடி, எலெக்ட்ரிக்கல் வேலைகளுக்காக ரூ.3.6 கோடி என மொத்தமாக கடந்த 5 மாதத்தில் ரூ.15.6 கோடி ரூபாய் அரசு பணத்தை அவர் தனது வீட்டிற்காக செலவு செய்திருக்கிறார் என அவர் கூறியுள்ளார். இந்த விஷயம் தற்போது மீண்டும் ஜெகன்மோகனை விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்