குஜராத் மாநிலத்தில் 3000 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் சிலை மழையினால் பாதிக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

rain water inside gujarat statue of unity

வடஇந்தியாவில் கடலோர பகுதிகளில் தென் மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், வல்லபாய் படேல் சிலையின் மார்புப் பகுதியில் அமைந்துள்ள பார்வையாளர் மாடத்தில் மழை நீர் பெருகி வழிந்திருக்கும் காட்சிகளை அங்கு சென்ற சுற்றுலாவாசிகள் படம் பிடித்து சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால் பொதுமக்களின் இந்த பதிவுகள் குறித்து அம்மாவட்ட நிர்வாகம் மறுத்துள்ளது. பார்வையாளர்கள் சிலையிலிருந்து இயற்கைக் காட்சிகளை ரசிக்கும் வகையில் அங்கு சாளரம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வழியாக மழை நீர் உள்ளே வருவது இயற்கையான ஒன்று தான். அப்படி தண்ணீர் தேங்கினால் அதனை சுத்தம் செய்ய பணியாளர்கள் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisment