Skip to main content

புதிதாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம் - அருண் ஜெட்லி

Published on 30/09/2017 | Edited on 30/09/2017
புதிதாக வரி செலுத்துவோரை ஊக்குவிக்க மத்திய அரசு திட்டம் - 
அருண் ஜெட்லி

மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் உள்ள வரிகள் துறை அதிகாரிகளுடன் நிதிமந்திரி அருண் ஜெட்லி ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த அவர் அரசின் வரி வருவாய் குறித்த தகவல்களை தெரிவித்தார்.

அதன்படி, 2017 செப்டம்பர்.18 வரை ரூ.3.7 லட்சம் கோடி நேரடி வரி வருவாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், 2012-2013ல் 4.72 கோடியாக இருந்த வரிசெலுத்துவோர் எண்ணிக்கை 2016-2017ல் 6.26 கோடியாக அதிகரித்துள்ளதாகவும் அவர் கூறினார். மேலும், புதிதாக வரி செலுத்துவோரை ஊக்குவிப்பதன் மூலம் வரிவிதிப்பை விரிவுபடுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் அருண் ஜெட்லி தெரிவித்தார்.

சார்ந்த செய்திகள்