Skip to main content

கிராமத்திலும் நகரத்திலும் பணவீக்கம் எவ்வளவு தெரியுமா...?

Published on 13/10/2018 | Edited on 13/10/2018

 

rr

 

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர் சரிவு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, இறைச்சி, காலணிகள் மற்றும் தானியவகை போன்ற பொருள்களின் விலை உயர்வு காரணங்களால் செப்டம்பர் மாதத்தின் சில்லறை வர்த்தகத்தில் பணவீக்கம்  3.77% என உயர்ந்துள்ளது. இது ஆகஸ்ட் மாதம் 3.69% என இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பணவீக்கம் கிராமப்புறங்களில் 3.34% எனவும் நகர்ப்புறங்களில் 4.31% எனவும் உள்ளது என்று புள்ளியில் அமைச்சகம் அறிவித்துள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலக வாடகை ஒதுக்கீடு!

Published on 13/01/2022 | Edited on 13/01/2022

 

Urban Housing Development Board Office Rental Allocation!

 

தமிழ்நாடு அரசு இன்று (13/01/2022) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்தில் இன்று (13/01/2022) வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்த ராவ் இ.ஆ.ப., வாரிய கண்ணகி நகர் திட்டப்பகுதியில் 10862 சதுர அடியில் உள்ள கட்டிடத்தினை பல இலவச சேவைகள் மேற்கொண்டு வரும் டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்திற்கு குறைந்த வாடகையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆணையை டாக்டர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் மக்கள் நலச்சங்கத்தின் தலைவர் மாரிசாமியிடம் வழங்கினார். 

 

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய கண்ணகி நகர் திட்டப்பகுதியில் வசித்து வரும் குடியிருப்புதாரர்களின் குழந்தைகளுக்கு கல்வியுடன் சேர்த்து விளையாட்டு பயிற்சிகள், தற்காப்பு பயிற்சிகள், பண்பாட்டு பயிற்சிகள், யோகா, நிலவொளி கல்வி (எண்ணும் எழுத்தும் கற்பித்தல்), மரம் நடுதல், டி.என்.பி.எஸ். குரூப் 4 தேர்வு பயிற்சி, முதல் தலைமுறைப் பட்டதாரிகளின் படிப்பிற்கு அனைத்து உதவிகளும் வழங்குதல், பொது நூலகம் அமைத்தல் கல்வி சுகாதாரம், சுற்றுச்சூழல், மருத்துவம், சமூகம், சட்டம் நிர்வாகம், பாலின சமத்துவம், மனித உரிமைகள், மகளிர் உரிமைகள், அரசு நலத்திட்டங்கள் தொடர்பான முறை சார்ந்த வல்லுநர்களைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருதல் பேரிடர் காலங்களில் (வெள்ளம், கரோனா ஊரடங்கு காலத்தில்) குடியிருப்புகளில் உள்ள அனைவருக்கும் அனைத்து அடிப்படை தேவைகளையும் நிறைவேற்றி வருவதால், குடியிருப்புகளில் உள்ள மாணவ, மாணவியர்கள், மகளிர் மற்றும் அங்கு வசிக்கும் மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வாரிய உதவிச் செயலாளர் (குடியிருப்பு) ஆ.கற்பகம் உடன் இருந்தனர்.  

 

Next Story

ஆசிரியர் கூட்டுறவு சங்கத்தில் ரூபாய் 19 லட்சம் சுருட்டல்; பெண் செயலாளர் பணியிடைநீக்கம்!

Published on 05/04/2021 | Edited on 05/04/2021

 

namakkal district urban association money secretary suspended

 

நாமக்கல் அருகே, ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கத்தில் 19 லட்சம் ரூபாய் வரை மோசடி நடந்துள்ளதை அடுத்து, சங்கத்தின் பெண் செயலாளர் அதிரடியாக பணியிடைநீக்கம் செய்யப்பட்டார்.

 

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டுறவு சிக்கன நாணய சங்கம் செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தின் தலைவராக சுகுமார் என்பவரும், செயலாளராக ராணி (வயது 45) என்பவரும் பணியாற்றி வருகின்றனர். 

 

எருமப்பட்டி ஒன்றியத்தில் பணியாற்றி வரும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் ஆகியோர் கூட்டுறவு சங்கத்திற்கு செலுத்தி வரும் மாதத்தவணை தொகையை முறையாக வரவு வைப்பதில்லை என புகார்கள் கிளம்பின. தொடர்ச்சியாக வந்த புகார்களின் அடிப்படையில், அந்தக் கூட்டுறவு சங்கத்தில் கடந்த 10 ஆண்டு காலமாக மேற்கொள்ளப்பட்ட வரவு, செலவு கணக்குகளைச் சரிபார்த்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய மண்டல துணைப்பதிவாளர் உத்தரவிட்டார். 

 

கடந்த ஒரு வாரமாக தணிக்கை அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட விசாரணையில், 19 லட்சம் ரூபாய் கணக்கில் வராமல் மோசடி செய்திருப்பதும், இதன் பின்னணியில் அந்த சங்கத்தின் செயலாளர் ராணிக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்தது.

 

இதையடுத்து, ராணி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கும்படி, சங்கத்தலைவர் சுகுமாருக்கு துணைப்பதிவாளர் பரிந்துரை செய்தார். அதன்படி, சங்கச் செயலாளர் ராணியை அதிரடியாக பணியிடை நீக்கம் செய்து சுகுமார் உத்தரவிட்டுள்ளார். மேலும், ராணி மீது கூட்டுறவு சங்க விதிகள் 81-ன் கீழ், உள்ளீட்டு விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 

 

இச்சம்பவம், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவுத்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.