Skip to main content

பார்க்காமல் காதல்...பார்த்ததும் கல்யாணம்...அதிர வைத்த சம்பவம்! 

Published on 15/10/2019 | Edited on 15/10/2019

நேரில் பாக்காமல் பேஸ்புக் மூலம் காதலித்து வந்த காதலர்கள் நேரில் பார்தததும் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாகியுள்ளது.  கொல்கத்தாவில் இருக்கும் சுதீப் கோஷல் என்ற இளைஞர் பிரத்திமா பானர்ஜி என்ற பெண்ணுடன் பேஸ்புக் மூலம் நண்பர் ஆகியுள்ளார். இருவரும் பேஸ்புக்கில் பல மாதங்களாக பேசிக்கொண்டு இருந்த நிலையில் இருவருக்குமிடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இவர்கள் காதலை பேஸ்புக்கில் சொல்லவில்லை. நேரில் பார்க்கும் போது தங்களது காதலை சொல்லலாம் என்று இருவரும் முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில் இருவரும் நேரில் சந்தித்து கொள்ளும் வாய்ப்பு கொல்கத்தாவில் நடைபெற்ற துர்கா பூஜை அன்று நடந்துள்ளது. இருவரும் அப்போது எதிர்பாராதவிதமாக சந்தித்துக் கொண்டனர். அப்பொழுது சுதீப் தன்னுடைய காதலை பிரத்திமாவிடம் தெரிவித்துள்ளார்.

 

lovers



நேரில் காதலன் காதலை சொன்னதும் சற்று தயங்கிய பிரதிமா சிறிது நேரம் யோசித்துள்ளார். பின்பு இருவரும் தனித்தனியே சென்று வீடியோவில் பேசிக்கொண்டு இருந்தனர். உடனடியாக இருவருக்கும் பிடித்து போனதன் காரணமாக துர்கா பூஜை நடைபெற்ற இடத்திலேயே இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இதுகுறித்து பிரதீப் கூறும் போது, "சம்பிரதாயங்களில் எனக்கு நம்பிக்கை இல்லை. ஆனால் என்னுடைய இஷ்ட தெய்வத்திற்கு முன்னால் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டது மனநிறைவை கொடுக்கின்றது." என தெரிவித்துள்ளார்.


மேலும் பிரத்திமா நான் இங்கு இவரை சந்திப்பேன் என சற்றும் எதிர்பார்க்கவில்லை. நான் கும்பிட்ட தெய்வம் எங்களை ஒன்று சேர்த்து வைத்துள்ளது என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். மேலும் இவர்களுடைய காதலுக்கு பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்த நிலையில் அவர்கள் இருவீட்டாரின் முன்னிலையில் விரைவில் மீண்டும் திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.