Skip to main content

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ரஷ்யா வரவேண்டும்... ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு

Published on 29/07/2018 | Edited on 29/07/2018
putin and trump

 

 

 


பிரிக்ஸ் மாநாட்டில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், "நாங்கள் அதிபர் ட்ரம்பை ரஷ்யாவிற்கு அழைக்கிறோம், இதற்கான அழைப்பு அவருக்கு ஏற்கனவே விடுக்கப்பட்டிருக்கிறது. நாங்கள் இருவரும் இதுபோன்ற சந்திப்புகளுக்கு தயாராகதான் இருக்கிறோம். நாங்கள் இருவரும் மீண்டும் சந்திக்கவேண்டும் என்று ட்ரம்ப் விரும்புகிறார், அதற்கு நானும் தயாராகவே இருக்கிறேன். இதற்காக நான் அமெரிக்கா செல்லவும் தயாராக இருக்கிறேன்." இவ்வாறு கூறினார். 

 

 

 

கடந்த 16ம் தேதி அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பும், ரஷ்ய அதிபர் புதினும் பின்லாந்தின் தலைநகர் ஹெல்சின்கியில் சந்தித்து பேசிக்கொண்டனர். இந்த சந்திப்பு இரண்டு மணிநேரங்கள் நீடித்தன என்பதும், இந்த சந்திப்பிற்கு பிறகு இருநாட்டு வெளியுறவு அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள் அடங்கிய குழுவினருடன் இணைந்து மீண்டும் ட்ரம்பும், புதினும் பேச்சுவார்த்தை நடத்தினர், இந்த சந்திப்பு 90 நிமிடங்கள் நீடித்தது என்பதும், அதன்பின் புதினும், ட்ரம்பும் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டியளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்