Skip to main content

தனுஷ் 50; பிரம்மாண்டமாக நடைபெறும் இசை வெளியீட்டு விழா

Published on 15/05/2024 | Edited on 15/05/2024
dhanush 50 raayan movie audio launch update

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார். 

இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிரது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ சமீபத்தில் வெளியானது. இப்பாடலை தனுஷ் எழுதி பாடியுள்ள நிலையில் தனுஷோடு ஏ.ஆர் ரஹ்மானும் பாடியுள்ளார். பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். இந்த நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஜூன் 1ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனுஷின் 50வது படம்மென்பதால் பல முன்னணி பிரபலங்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.  

சார்ந்த செய்திகள்