Skip to main content

ராஜீவ்காந்தி நினைவிடத்தில் சர்ச்சை டிக்டாக்! வருத்தம் தெரிவித்த சாட்டை துரைமுருகன்!

Published on 03/03/2020 | Edited on 04/03/2020
s

 

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ராஜீவ்காந்தி நினைவிடத்தில் நாம் தமிழர் கட்சியின் இளைஞர் அணி நிர்வாகி சாட்டை துரைமுருகன் என்பவர், ’’தமிழர்களை தொட்டதால் தூக்கினோம்’’என்று சீமான் குரலில் பேசி டிக்டாக் வீடியோ எடுத்து அதை வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.  காங்கிரசார் இது குறித்து புகார் தெரிவித்து வந்த நிலையில், சர்ச்சைக்குரிய அந்த வீடியோவை துரைமுருகன் அகற்றியுள்ளார்.  ஆனாலும் அந்த வீடியோ குறித்த பரபரப்பு இன்னும் ஓயவில்லை.

 

இந்நிலையில், அந்த வீடியோ வெளியிட்டதற்கு வருத்தம் தெரிவித்து துரைமுருகன் வெளியிட்டுள்ள வீடியோவில்,

‘’கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு சென்றிருந்தேன்.  அப்போது ஒரு டிக்டாக் வீடியோ எடுத்தேன்.  அந்த வீடியோவை வெளியிட்ட ஒரு மணி நேரத்திலேயே இது தவறு என்று புரிந்துகொண்டு அதை அழித்துவிட்டேன்.   ஆனால் அதற்கு முன்பாகவே அந்த வீடியோவை டவுன்லோடு செய்து சமூக வலைத்தளங்களில் பலர் பரப்பி வருகிறார்கள்.   யாரையும் கொச்சைப்படுத்தும் நோக்கில் நான் இதை செய்யவில்லை. விளையாட்டுத்தனமாக இதை செய்தேன்.  அந்த வீடியோவினால் யாருடைய மனதும் புண்பட்டிருந்தால் அதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்’’

என்று கூறியுள்ளார்.


 

சார்ந்த செய்திகள்